India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவில்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகன் அய்யனார் குஜராத்தில் கொத்தடிமையாக இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். குஜராத் சென்ற தூத்துக்குடி தனிப்படை போலீசார் அய்யனார் விருப்பத்தின் பேரில் அங்கு பணி புரிவதை தெரிந்து கொண்டனர். கடும் மழை வெள்ளத்தில் உண்மை வெளிக்கொணர நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி எஸ் பி க்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்கு பொறியாளர் அணிக்கு ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் வழங்கலாம்; விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் பட்டயம், ஐடிஐ படித்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு அமைச்சர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் ஜெகன் பெரியசாமி இன்று தனது முகநூல் பக்கத்தில் அவருக்கு, வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்.
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதற்கு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கீதாஜீவன் முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகர ஓபிஎஸ் அணியை சேர்ந்த மூன்று பேர் அக்கட்சியின் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கியுள்ளார். இதன்படி மாநகர் மாவட்ட பொருளாளர் ஜோசப், எட்வின் சண்முகம் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பிரபல இதயாலயா ஹார்ட் சென்டர் சார்பாக, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில், நாளை இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. காலை 7:00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், பொது மக்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை பரிசோதனை, எக்கோ பரிசோதனை, இசிஜி பரிசோதனை, மருத்துவ நிபுணர் ஆலோசனைகள், உளவியல் நிபுணர் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.
திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயரதிகாரிகளுடன், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில், சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை தலைவர், நெல்லை மாநகர காவல் ஆணையர், நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு பயறுவகை திட்டம் 24-25ம் ஆண்டில் செயல்படுத்திட ரூ.3.3 கோடி நிதி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் பயறு வகைப் பயிர்களான உளுந்து மற்றும் பாசி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு செயல் விளக்கத் திடல் அமைத்திட ஒரு எக்டேருக்கு ரூ.8500 மானியத்தில், இடுபொருட்களான உளுந்து, மக்காசோளம் வழங்கப்படுகிறது. இதில், விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் கூறினார்.
ஹாரி பாட்டர் படங்கள் மூலம் மிகவும் பிரபலமான மூத்த நடிகை டேம் மேகி ஸ்மித் காலமானார். இதையடுத்து தூத்துக்குடி எம்பி கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கலில் புகழ்பெற்ற டேம் மேகி ஸ்மித்துக்கு பிரியாவிடை. அவர்களுடைய திறமையும் கருணையும் ஒவ்வொரு மேடையிலும் திரையிலும் ஒளிரச் செய்தன என குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் அடுத்த மாதம் மூன்றாம் தேதி புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா துவங்க உள்ளது. இதனை ஒட்டி பொதுமக்களிடம் வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது நூலகத்துறை மற்றும் வாசகர் வட்டம் சார்பில் வாசிப்பு வானமே எல்லை என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.