India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கும் வகையில் இரவு நேரங்களில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மாவட்டத்தில் இரவு நேரங்களில் ரோந்து பணிகள் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட கடம்பூர் சார்பதிவாளர் பார்வதி நாதனுக்கு, ரூ.25,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை விட சார் பதிவாளர் உயர்ந்தவர்களா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மூல ஆவணங்கள் இல்லை எனக்கூறி கடம்பூரை சேர்ந்த பாண்டியின் பத்திரப்பதிவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பத்திர பதிவு செய்து கொடுக்க உத்தரவு.
தூத்துக்குடியில் அனைத்து இடங்களிலும் போலீசார் வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணி மேற்கொண்டு போக்குவரத்து விதிகளை மீறுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டிய நபர்கள் மீது நேற்று (செப்.29) 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை இணையமைச்சர் முருகனை தெற்கு மாவட்ட பாஜ., பொதுச் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் திருச்செந்தூரில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், விழா நாட்களில் லட்ச கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே சென்னை-திருநெல்வேளி ‘வந்தே பாரத்’ ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க நடவடக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை ஏற்பாட்டில் அந்தந்த காவல் நிலைய சரகங்களில் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தூத்துக்குடி பிரையன்ட் நகரில் நம்ம தெரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் மது அருந்தி விட்டோ அல்லது இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்யக்கூடாது என்றும், மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி எஸ் பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று உலக ரேபீஸ் முன்னிட்டு தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாக நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1203 நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவினை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தூத்துக்குடி பிரையன்ட் நகரில் நம்ம தெரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் மது அருந்தி விட்டோ அல்லது இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்யக்கூடாது என்றும், மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி எஸ் பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.
கோவில்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகன் அய்யனார் குஜராத்தில் கொத்தடிமையாக இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். குஜராத் சென்ற தூத்துக்குடி தனிப்படை போலீசார் அய்யனார் விருப்பத்தின் பேரில் அங்கு பணி புரிவதை தெரிந்து கொண்டனர். கடும் மழை வெள்ளத்தில் உண்மை வெளிக்கொணர நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி எஸ் பி க்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்கு பொறியாளர் அணிக்கு ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் வழங்கலாம்; விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் பட்டயம், ஐடிஐ படித்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.