India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வருகின்ற 17ஆம் தேதி காலை முதல் வரும் 19ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து அரசு மதுபான கடைகளும், அதனை ஒட்டி உள்ள பார்களும் மூடி இருக்க வேண்டும் என்றும் ,அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதியும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 81 லட்சத்தி 13,000 மதிப்புள்ள ரொக்கப்பணம், பரிசுப் பொருட்கள், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சிவசாமி வேலுமணி இன்று சாத்தான்குளத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்பொழுது பெரியதாழை அருகே வைத்து அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை இட்டனர். சோதனை முடிந்ததும் பறக்கும் படை அதிகாரிகளிடம் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டதில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான பெருங்குளம் மாயக்கூத்தர் ஆலயத்தில் பங்குனி பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9 ஆம் நாளான நேற்று இரவு சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜைகளுக்கு பின்னர் சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்களவை தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு நாளன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து வாக்குச்சாவடிகளில் வெயிலின் தாக்கத்திலிருந்து வாக்காளர்களை பாதுகாத்திட செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று தூத்துக்குடியில் மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
கருங்குளம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் காமராசு எழுதிய புத்தகம் பேசுதடி என்ற சிறுகதை புத்தகத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. காரைக்குடி வள்ளுவர் பேரவை, பூதக்கண்ணாடி கல்வி மையம் சார்பில் புத்தகம் பேசுதடி சிறுகதைக்கு ரூ.5,000 எழுத்தாளர் மல்லிகா அய்க்கண் இன்று வழங்கினார்.
கோவில்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் அழகர்சாமி தயாரிப்பில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக கனிமொழி கீதம் பாடல் ஆடியோ இன்று வெளியிடப்பட்டது. பாடல் ஆடியோவை கனிமொழி கருணாநிதி இன்று வெளியிட்டார். இதில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி, பத்மநாப மங்கலத்தை சேர்ந்த இசக்கி என்பவர் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அதேபோன்று தெய்வச் செயல் புரத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த மாதம் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் இருந்து தினசரி மைசூர், சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் அனைத்திலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பயணச்சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இரவு நேர ரயில் ஒன்று இயக்க வேண்டும், காலையில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.