Tuticorin

News April 19, 2024

குடும்பத்த தகராறு காரணமாக தற்கொலை முயற்சி

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் நேற்று குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் வைத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

News April 18, 2024

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

தூத்துக்குடிமக்களவைத் தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வாகன வசதி

image

தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிக்க மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் சக் ஷம் செயலி அல்லது 1950 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வாக்களிக்க செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

தூத்துக்குடி: 91.5% பூத் ஸ்லிப் விநியோகம்

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள 1,624 வாக்குச்சாவடிகளில் 14.58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு இதுவரை 91.5% பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் கிடைக்கப் பெறாதவர்களுக்கு வாக்குச்சாவடியில் நிலை அலுவலர்களால் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி 

image

தூத்துக்குடி பென்னாகரத்தை சேர்ந்தவர் பெவின் (20). நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்து மோதியதில் காயமடைந்தார். மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்த பெவின் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 18, 2024

தூத்துக்குடியில் 16 பேர் கைது

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று முதல் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீஸார் நேற்று நடத்திய சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 506 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

News April 18, 2024

மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு வரும் 20 ஆம் தேதி தூத்துக்குடி ஜேஎம்சி கிரிக்கெட் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமார் நேற்று தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

சுவாமி மூஷிக வாகனத்தில் உலா

image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தில் உள்ள ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 5 ஆம் நாளான நேற்று இரவு சுவாமி விநாயகர் மூஷிக வாகனத்திலும் சுவாமி காள தீஸ்வரர், அம்மன் கல்யாணசுந்தரி ஆகியோர் ரிஷப வாகனத்திலும் தனித்தனியே எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News April 17, 2024

தூத்துக்குடி: ரோந்து காவலர்களுக்கு எஸ்பி அறிவுரை

image

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் தொடர்பாக சிறப்பு வாகன ரோந்து பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. இதில் எஸ்பி பாலாஜி சரவணன் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

News April 17, 2024

கோவில்பட்டி: சுயேச்சை வேட்பாளருக்கு கொலை மிரட்டல்

image

கோவில்பட்டி பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்று(ஏப்.16) முன்தினம் இவர் தட்டப்பாறை பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக தட்டப்பாறை போலீசில் நேற்று(ஏப்.16) புகார் செய்ததன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.