India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 170 சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு நவ.27 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஒரு மூத்த ஆலோசகர், 5 வழக்கு பணியாளர்கள் ,ஒரு பாதுகாவலர் , இரண்டு பல்நோக்கு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியுடைய நபர்கள் அடுத்த மாதம் 15 ம் தேதிக்குள் சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பேரூராட்சி நகர பகுதிகளில் திமுகவினர் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்” என திமுகவினரை கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில் -“வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 26-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதுகுறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தூத்துக்குடி மீனவர்கள் நாளை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசுவதால், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 41,211 படிவங்கள் வரப் பெற்றுள்ளதாக ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். மேலும் வாய்ப்பினை தவற விட்டவர்கள் வரும் நவ., 28ம் தேதி வரை அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் சரக உட்கோட்டத்தின் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த வசந்தகுமார் நிர்வாக காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதிய துணை கண்காணிப்பாளராக மகேஷ்குமார் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது சக போலீசார் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணைக்கட்டில் இருந்து கடலுக்கு தண்ணீர் வீணாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் பருவம் செய்து வரும் நிலங்களுக்கு தண்ணீர் பாய்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ள நீர் கால்வாயை திறக்காததை கண்டித்து சாத்தான்குளம் பகுதியில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.