Tuticorin

News April 29, 2024

உடல் பரிசோதனை முகாம்

image

தூத்துக்குடியில் உள்ள அரசு மீன்வளம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் இன்று உடல் நலப் பரிசோதனை முகாம் நடைபெற்றது . தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு 146 மாணவர்களுக்கு உடல் நல பரிசோதனை செய்தனர். மேலும் இந்த முகாமினை ஒட்டி மாணவர்களின் ரத்ததான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

News April 29, 2024

தூத்துக்குடி: மண்ணெண்ணெய் விளக்கில் பொதுத்தேர்வு

image

சாத்தான்குளம் அருகே பழங்குளத்தை சேர்ந்தவர் லட்சுமி. கூலி தொழிலாளியான இவர்; அரசு நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் பட்டா வழங்காததால் மின் இணைப்பு பெற முடியவில்லை. இதனால் தனது மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மண்ணெண்ணெய் விளக்கில் படித்ததாக லட்சுமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளார்.

News April 29, 2024

தூத்துக்குடி: 5 கிலோ ஆந்திரா கஞ்சா

image

தூத்துக்குடி சிப்காட் போலீசார் நேற்று நான்காம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

News April 29, 2024

2329 காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி தூத்துக்குடி மாவட்ட நீதித்துறையில் 61 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க <>https.//www.mhc.tn.gov.in <<>>என்ற இணைய தளத்தில் மே.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 29, 2024

தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது

image

தூத்துக்குடி திரவிய புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சுடலைகணேஷ் . சுடலை கணேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதை மாரியப்பன் நேற்று கண்டிக்கவே ஆத்திரமடைந்த சுடலை கணேஷ் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் மாரியப்பன் பலத்த காயமடைந்த நிலையில்  வடபாகம் போலீசார் சுடலைகணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2024

77 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள்

image

தமிழக முழுவதும் கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழக அரசு உத்தேசித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 2299 பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 77 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பலர் தேர்வுக்கு ஆர்வாமாக தயாராகி வருகின்றனர்.

News April 29, 2024

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தாளமுத்து நகர் போலீசார் நேற்று மாதா நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News April 29, 2024

டிரைவர் வெட்டிக்கொலை 3 பேர் கைது

image

நெல்லை தாழையூத்தை சேர்ந்தவர் சந்தன மாரிமுத்து .நேற்று முன்தினம் இவர் கயத்தார் அருகே சூரிய மினிக்கண் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். நேற்று அதிகாலை நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இவரை ஹரி பிரசாத் உட்பட 3 பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தன மாரிமுத்து உயிரிழந்தார். கயத்தாறு போலீசார் ஹரி பிரசாத் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

News April 29, 2024

துறைமுகத்தில் பல கோடி ஊழல் – ஐ என் டி யு சி

image

அகில இந்திய ஐஎன்டியூசி துணைத் தலைவர் கதிர்வேல் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் 2011 இல் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல் கொடுத்தது போல் கணக்கு காட்டி பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News April 28, 2024

நாளை மின்தடை அறிவிப்பு

image

கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை(ஏப்.29) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திலகர் நகர்,காந்தி நகர்,அத்தை கொண்டான்,இந்திரா நகர், லட்சுமி மில் காலனி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் தடை ஏற்படும் என கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.