India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.02) மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை என பொதுமக்கள் அளித்த 523 கோரிக்கை மனுக்கள், மாற்றுத் திறனாளிகள் அளித்த 53 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இந்த நிதி ஆண்டில் நவம்பர் மாதம் வரை 27.87 மில்லியன் டன் சரக்குகள் மற்றும் 5,21,246 சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.97 சதவீதம் பெட்டகங்கள் கையாளுவதில் 5.36 சதவீதம் வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்கள்(25 ஆண்கள், 3 பெண்கள், 7மீனவ இளைஞர் ஊர்காவல்படை) நிரப்ப இன்று(02/12/2024) தூத்துக்குடி மாவட்ட காவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் உயரம், மார்பு அளவு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
தூத்துக்குடி எம்பி கனிமொழி, மதுரை மாவட்ட இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்யவும், மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது முகநூல் பக்கத்தில் நேற்று(டிச.,1) பதிவிட்டுள்ளா.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நேற்று(டிச.,1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை பதிவிடுவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக பெண்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறு பதிவிடுவதன் மூலம் பல்வேறு குற்றங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் அதனை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராணி. இவருக்கும் இவர் பக்கத்து வீட்டில் வசித்த பொன்ராஜ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று செல்வராணி வீட்டுக்கு சென்ற பொன்ராஜும் அவரது நண்பர் யோகேஷ் குமாரும் செல்வராணியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இது சம்பந்தமாக தென்பாகம் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் த்ரோபால் விளையாட்டு வீரர் இசக்கி துரை. இவர் த்ரோபால் போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இந்திய த்ரோபால் அணிக்கு இவர் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட இசக்கி துரைக்கு சக வீரர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
தூத்துக்குடியை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகர் பான் நேற்று(நவ.30) விடுத்துள்ள அறிக்கையில், மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் மாற்றிகள் மின்கம்பங்கள் மின்பகிர்வு பெட்டிகள் ஸ்டே ஒயர்கள் அருகில் செல்லக்கூடாது. மலையில் அறுந்து விழுந்த மின்கம்பிகள் அருகே செல்லக்கூடாது என்றும் இது சம்பந்தமாக உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆண்கள் 3 பெண்கள் என, மொத்தம் 28 ஊர்காவல் படை பணியிடங்களுக்கும், 7 மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையினருக்கும் நிரப்புவதற்கு ஆட்கள் தேர்வு வரும் 2 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உடல் தகுதியுடன் 18 வயதிற்கு மேல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.