Tuticorin

News December 13, 2024

தூத்துக்குடியில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 14ஆம் தேதி முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். வசந்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 13, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் எண்கள் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச12) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News December 12, 2024

செஸ் சாம்பியன் குகேஷ்க்கு தூத்துக்குடி எம்பி வாழ்த்து

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “இளைய உலக செஸ் சாம்பியனாகி, ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்திய குகேஷ் டிக்கு வாழ்த்துகள்; உங்கள் புத்திசாலித்தனமும் உறுதியும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது; இன்று தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது; உங்களின் அசாத்திய சாதனையைக் கொண்டாடுகிறது” என வாழ்த்தி உள்ளார்.

News December 12, 2024

காணொலிக்காட்சி வாயிலாக ஆட்சியர் ஆலோசனை

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கனமழையினால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை தடுப்பது குறித்தும், நிவாரண முகாம்கள் தயார் நிலைப்படுத்தல் குறித்தும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, பேரிடர் மேலாண்மைக்குழு, பொது சுகாதாரத்துறை உட்பட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆலோசனை மேற்கொண்டார்.

News December 12, 2024

மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் 

image

தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரங்கில் இன்று (டிசம்பர் 12) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இருந்தார்.

News December 12, 2024

தூத்துக்குடி பல்கலை., தேர்வர்களுக்கு விடுமுறை இல்லை

image

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். ஆனால் பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் மேலும், கனமழை குறித்து ஏதேனும் உதவிக்கு 9384056221, 8680800900 ஆகிய எணளில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் 

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வரும் 14ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைத்து பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவைகளை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

தூத்துக்குடியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை துறை சார்பில், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஆறாவது சுற்று இம்மாதம் 16 ஆம் தேதி துவங்கி அடுத்த ஆண்டு ஐந்தாம் தேதி வரை 21 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி என்னும் வைரஸ் தொற்று நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 12, 2024

அனிதா ராதாகிருஷ்ணனிடம் அமலாக்கத்துறை விசாரணை

image

2001-06 அதிமுக ஆட்சிகாலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோது ரூ.4.90 கோடி மதிப்பில் முறைகேடாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்து, 10 சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறப்பட்ட சொத்து விபரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.

error: Content is protected !!