India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(நவ.,19) விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் கலெக்டர் தெரவித்துள்ளார். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ18) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில்குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.19) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து 487 மனுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து 30 மனுக்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மனுக்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து மாதம் தோறும் விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் வரும் 21ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி என தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் தெய்வானை என்ற யானை உள்ளது. இந்நிலையில், இந்த யானை மிதித்து பாகன் உதயன் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் பலியாகியுள்ளனர்.
ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பல் இயக்கியவர் என்பது நமக்கு தெரிந்த வரலாறு. ஆனால் அவர் சுதேசி பிரச்சார சபை, தர்ம சங்க நெசவு சாலை, தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், சுதேசி பண்டகசாலை வேளாண் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை துவக்கியவருமான பிதாமகன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,18) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.
ஓட்டப்பிடாரம் தொகுதி புளியம்பட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வரும் குவாரியை மூடக்கோரி சமீபத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்த போராட்டத்திற்கு தீர்வு ஏற்படாத காரணத்தினால் இன்று (நவ.18) காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் பெருந்திரளாக சென்று மனு கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜசேகர், இசக்கி துரை, ஆனந்த் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 16 மற்றும் 17 தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதிதாக பெயர் சேர்க்க 11,554 படிவங்களும், பெயர் நீக்க 976 படிவங்களும், பெயர் திருத்த முகவரி மாற்ற 8,136 படிவங்களும், ஆதார் இணைக்க 13 படிவங்களும் என மொத்தம் 20,679 படிவங்கள் வரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.