India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (18.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது ஏற பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு. அதன்படி அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி மற்ற நேரங்களில் அனுமதி, ஏறும் பாதை மூடப்பட உள்ளது. வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் தெரிவித்துள்ளனர்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் https://tnuwwb.tn.gov.in இணையதளம் மூலம் உறுப்பினராக சேரலாம். கல்வி, திருமணம், ஓய்வூதியம், விபத்து மரணம் உள்ளிட்ட நிதியுதவிகள் வழங்கப்படும் மற்றும் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டு ரூ.50,000 நிதியுதவி கிடைக்கும். இதனை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ள திருக்குறள் கருத்தரங்கம்,விநாடி, வினா உள்ளிட்ட போட்டிகளில் பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோா் டிச.21ஆம் தேதிக்குள் மாவட்ட மைய நூலகத்தை அணுகி போட்டிகளில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
திமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுக்கான தேர்வு நடத்தும். 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பதிவு www.tnprivatejobs.tn.gov.in செய்யலாம் என்று கலக்டர் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (19/12/2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், கீழ்நாத்தூர், கோபால் நாயக்கன் தெரு, ரமணா ஆசிரமம், பைபாஸ் ரோடு, சிருப்பாகம், சாவல்பூண்டி, காந்திபுரம், காம்பட்டு ஜமுனாமரத்தூர், கோவிலூர், புதுப்பட்டு, மேல் சிலம்படி, பெருங்காட்டூர், அரசவள்ளி, மாம்பட்டு, முருகாபாடி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (17.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா 2024 திருவண்ணாமலை மகாதீபத்தின் போது பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக தவித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை 17/12/2024 இன்று செவ்வாய் கிழமை மீட்டு முதுகில் சுமந்துவந்த வனக்காப்பாளர்கள்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிச.20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகிக்கிறாா்.எனவே,மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள்,விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 433 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள் மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.