Tiruvannamalai

News November 2, 2024

மழைக்காலத்தில் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

image

வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.

News November 2, 2024

தி.மலையில் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் 21-ஆவது கால்நடைகள் கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள், விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தப் பணி, 2025 பிப்ரவரி மாதம் இறுதி வரை நடைபெறுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2024

தி.மலையில் ரூ.17 கோடிக்கு மதுபானம் விற்பனை

image

தி.மலையில் மொத்தம் 204 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.17 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி அன்று மட்டும் ரூ.8½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2024

350 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

image

திருவண்ணாமலை அருகே, 350 ஆண்டு பழமையான, 2 கல்வெட்டு உட்பட, 3 கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தச்சம்பட்டில் முருகன் கோவில் குளக்கரையில், 2 கல்வெட்டுகளை கண்டறிந்தனர். அதில், ஒரு கல்வெட்டில், குறு நில மன்னன் தன் மனைவியுடன் கூடிய, பலகை கல் சிற்பமும், மற்றொரு கல்வெட்டில் கிருஷ்ணப்பநாயக்கர் குளம், தர்ம சத்திரம் கட்டியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது. இவை, 350 ஆண்டு பழமையானவை.

News November 1, 2024

தி.மலை மக்களே உங்க கொண்டாட்டம் எப்படி இருந்தது?

image

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது?

News November 1, 2024

வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் கொண்டாட்டம்

image

மங்கலம் அடுத்த வி.பி.குப்பம் கிராமத்தில் குடியிருப்பு பகுதி நடுவே உள்ள ஆலமரத்தின் கீழ், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த மரத்தில் 500க்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசிக்கின்றன. இவற்றை தெய்வ அம்சமாக கருதி, கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இதனால், வவ்வால்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க, தீபாவளியின் போது, பட்டாசு வெடிப்பதை அந்த கிராம மக்கள், மூன்று தலைமுறைகளாக தவிர்த்து வருகின்றனர்.

News October 31, 2024

தி.மலையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியான இன்று தி.மலை, வேலூர், கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News October 31, 2024

தி.மலை மக்களே கவனமாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தி.மலை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 30, 2024

திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

image

கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாகநவ.3 வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவ.-1 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News October 29, 2024

திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

image

கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று முதல் நவம்பர்-3 வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர்-1 அன்று திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.