India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று அணையின் முழு கொள்ளவு 119 கனஅடியாகவும், அணையின் தண்ணீர் இருப்பு 117.10 அடியாகவும் அணைக்கு வீனாடிக்கு தண்ணீர் வரத்து : 1100 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 850 கன அடியாகவும் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 467 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், வருவாய் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், கார்த்திகை தீபத் திருவிழாவின் பத்தாம் நாள் அன்று, திருக்கோயில் உள்ளே பரணி தீபத்துக்கு 7,500 பக்தர்களும், மகா தீபத்துக்கு 11,500 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள். 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க 2000 பக்தர்களுக்கு மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தி.மலை தீபத் திருநாளன்று பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பரணி தீபம் அன்று 7,500 பக்தர்களும், மகா தீபம் அன்று கோயிலுக்குள் 11,500 பேரும் அனுமதிப்பதுடன் தீபம் அன்று முன்னுரிமை அடிப்படையில் 2,000 பக்தர்கள் தீப மலையை ஏற அனுமதி. ஆன்லைன் மூலம் பரணி தீபத்திற்கு 500, மகா தீபத்திற்கு 1,100 கட்டண டிக்கெட் வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் திங்கள் கிழமையான இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் இன்று காலை 6 மணி நிலவரப்படி 119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 117.10 அடி நீர் நிரம்பி உள்ளது. அணைக்கு 1100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது அணையில் இருந்து 850 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் இரு தினங்களில் அணையின் முழு கொள்ளளவு எட்டும் என பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு.
தி.மலையில் மொத்தம் 204 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.17 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி அன்று மட்டும் ரூ.8½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் அடுத்த மாதம் டிசம்பர் 13 ஆம் தேதி மகா தீப திருவிழா நடைபெற உள்ளது. மேலும் கார்த்திகை தீப திருவிழாவின் 10 வது நாளான டிசம்பர் 10 ஆம் தேதி மகா ரதம் வீதியுலா நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மகா ரதம் வெள்ளோட்டம் வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 07.11.2024-ம் தேதி காலை 8 மணி முதல் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் ஒரு நாள் முன்னதாக 06.11.2024-ம் தேதி காலை 8 மணி முதல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும்.
Sorry, no posts matched your criteria.