India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் நாடு முழுவதும் தீபாவளியை முன்னிட்டு நவ.01 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை சனிக்கிழமை (09.11.2024) அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என திருவண்ணாமலை மாவட்ட சிஇஓ நேற்று உத்தரவிட்டுள்ளார். ஷேர் செய்யவும்
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நவம்பர் 11-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.முகாமில் பங்கேற்போர் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அதன் விவரத்தினை அனைத்து அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் கொண்டு வர வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
வெளுக்கனந்தல் கிராமத்தில் வசிப்பவர் மோகன்குமார் (30). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, போளூர் நோக்கி வந்த புதுச்சேரியைச் சேர்ந்த சொகுசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மோகன்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை 5,156 மாணவர்,மாணவிகள் இடைநின்ற மாணவர்களாக கண்டறியப்பட்டு இதுவரை 1,001 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 4,155 மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி ஆசிரியர்கள்,ஆசிரியர் பயிற்றுநர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நவம்பர் மாத இறுதிக்குள் 4,155 மாணவர்,மாணவிகளையும் மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ஆட்சியர் கூறினார்.
தி.மலை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 06-ம் தேதி காலை 8.00 மணிமுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் 09.11.2024-ம் தேதி காலை 8.00 மணிமுதல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும் என்பதை தெரிவித்தனர்.
சந்தவாசல், கொட்டா ரெட்டிப்பாளைரம் சேர்ந்த கௌதமி (25) கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இன்று டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் படித்துவிட்டு வீடு செல்வதற்காக கண்ணமங்கலம்-போளூர் அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதற்காக முயற்சித்துள்ளார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்ணமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை போளூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த ரயில் போக்குவரத்து தற்போது திருவண்ணாமலையிலிருந்து போளூர், வேலூர், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரை வரை இயக்கப்பட்ட ரயில் நவம்பர் 7ஆம் தேதி முதல் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பயணிகள் நெரிசலை தவிர்க்க 12 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், தி.மலை மாவட்டத்தில் 120 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு குறைதீர்வு கூட்டம் நாளை காலை 11 மணி அளவில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடக்கிறது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு உதவி கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வந்தவாசி அடுத்த ஆராசூர் கிராமத்தில் இன்று போளூர்- சென்னை நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது பால் ஏற்றி வந்தவாசி நோக்கிச் சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் உள்ளிட்டோருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
Sorry, no posts matched your criteria.