Tiruvannamalai

News November 11, 2024

தி.மலையில் ஏடிஜிபி நேரில் ஆய்வு

image

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் அண்ணாமலையார் ஆலய கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து இன்று கோவில்  வளாகத்தில் மற்றும் திருவண்ணாமலை முழுவதும் தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு மேற்கொண்டார். வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் வேலூர் டிஐஜி தேவராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கிரண்ஸ்ருதி ,ஸ்ரேயா குப்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

News November 11, 2024

திருவண்ணாமலை கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் 

image

திருவண்ணாமலை: செங்கம், ஆடையூர், வேங்கிக்கால் உள்ளிட்ட இடங்களில் ‘மாரீசன்’ படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். 

News November 10, 2024

ஆரணியில் 13 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல் 

image

ஆரணி டவுன் சத்தியமூர்த்தி விஷாலையில் ஜனார்த்தனன்(55) என்ற நபர் நடத்திவரும் கடையில் ராஜேஸ்வரி(57) என்பவர் வேலை செய்து வந்த நிலையில், ஜனார்த்தனன் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடைக்கு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News November 10, 2024

தி.மலை: சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆய்வு

image

நெடுஞ்சாலைத்துறை சார்பில், உள் மாட வீதியில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் அருகில் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ப.கார்த்திவேல்மாறன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன், ஒப்பந்ததாரர் அருணை வெங்கட் உட்பட பலர் உடனிருந்தனர். 

News November 10, 2024

கபடி போட்டி ஈரோடு அணி வெற்றி

image

திருவண்ணாமலையில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் பெண்கள் கபடி இறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு அணிக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் இன்று பரிசு கோப்பையை வழங்கினர். உடன் டி.ஆர்.ஓ. ராமப்பிரதீபன், இரா.ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

News November 10, 2024

தி.மலையில் நவ.14 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை முதல் 15 ஆம் தேதி வரை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் நவ.14 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 23 மாவட்டக்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

ஐப்பசி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

மலையே மகேசன் எனப் போற்றி வணங்கப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர் அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி வரும் 15-ந் தேதி காலை 5.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 16-ந் தேதி காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் 15-ந் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை 

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (08.11.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாண, மாணவிகள் பள்ளிக் கல்வி இடைநிற்றலை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 9, 2024

கலசப்பாக்கம் அருகே நாட்டு துப்பாக்கி தயார் செய்த நபர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கொண்டம் காரியந்தல் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் காலணியில் வசிக்கும் சங்கர் என்பவர் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகளை தயார் செய்து வருவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரை கைது செய்து அவர் தயாரித்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

News November 8, 2024

பொருள் இயல், புள்ளி இயல் கையேடு வெளியீடு 

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் இன்று (08.11.2024) வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை மூலம் தயாரிக்கப்பட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான திருவண்ணாமலை மாவட்ட புள்ளி இயல் கையேட்டினை வெளியிட்டார். மேலும், துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.