India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள 109 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் வழியாக அனுப்ப வேண்டும்.
செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல் (31). இவர் அடுத்தவரின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் தனது சகோதரருடன் கூழமந்தல் பள்ளிவாசல் அருகே ரசூலிடம் ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்டு அடித்து உதைத்தனர். காயம் அடைந்த ரசூல் தூசி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். தமிழில் பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று, மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார். சிவராத்திரியையொட்டி கோயிலில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இருந்தபோதிலும், பொறுமையாக வரிசையில் நின்று வழிபட்டார்.
தி.மலை, வெம்பாக்கம் அருகே குரங்கணில்மூட்டத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. பாவ விமோசனம், ஞானம், அறிவுத்திறன் வளரவும் சனி தோஷம் நீங்கவும் இங்கு வழிபடலாம்.பெண்கள் இங்கு அம்பாளுக்கு வளையல் போட்டு,பின் அதனை அணிந்து கொள்வதால் புத்திரபாக்கியமும் சுகப்பிரசவமும் நடக்கும் என்பது நம்பிக்கை.மேலும் இங்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி பழனியம்மாள் மற்றும் 18 வயதுடைய பெண் ஆகியோர் 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி மற்றும் சிறுவனை ஆபாசமாக படம் எடுத்துத்து, இதனை வெளியிடாமல் இருக்க ஒரு பவுன் நகை கேட்டு இரண்டு பெண்களும் சிறுமியிடம் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்ன்றனர்.
கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுகாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 62), தொழிலாளர். இவர், நேற்று முன்தினம் மொப்பட்டில் பூசிமலைகுப்பம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தேவராஜ் ஓட்டிச் சென்ற மொப்பட்டும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வேட்டவலம் வடக்கு வெளி பகுதியில் விவசாயி தண்டபாணிக்கு சொந்தமான பசுமாடு அருகில் உள்ள விவசாயி கிணற்றில் இன்று தவறி விழுந்தது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையின,ர் விவசாய கிணற்றில் விழுந்து இருந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விபத்து காப்பீட்டு திட்டம் பதிவு வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இந்திய அஞ்சல் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இணைந்து மக்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகின்றன. 18 முதல் 65 வயதுக்குள் இருக்கும் அனைவரும் ரூ.320-க்கு 5 லட்சம், ரூ.559-க்கு 10 லட்சம், ரூ.799-க்கு 15 லட்சம் வரை காப்பீடு பெறலாம். அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பதிவு செய்யலாம்.
ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(41) இவரது மனைவி சுதா தி.மலை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் கிளார்காக வேலை செய்து வருகிறார். 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரபு, மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அவர், வராஹி அம்மன் கோயில் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து,போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருவண்ணாமலையில் மட்டும் 95 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT
Sorry, no posts matched your criteria.