Tiruvannamalai

News March 5, 2025

அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழிபாடு

image

பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இன்று காலை வழிபாடு செய்தார். பலத்த பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த அவர் தனது ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாரே சென்றார். பின்னர் சிவ பெருமானை வழிபட்ட அவர் அங்கிருந்து புறப்பட்டார். அடிக்கடி இவர் இங்கு வந்து வழிபாடு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 5, 2025

திருவண்ணாமலை: பூமிக்கு அடியில் தங்கம்

image

தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.அதன்படி, திருவண்ணாமலை, விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், செல்போன் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தங்கம் மற்றும் லித்தியம் குறித்து ஆய்வு

News March 4, 2025

மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு

image

திருவண்ணாமலை மாநகராட்சி அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் மாடவீதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டரங்கினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 4, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <>ஆன்லைன்<<>> வழியாக இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

image

திருவண்ணாமலையில் மஞ்சப்பை விருதுக்கு தகுதியுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார். அதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதள ளத்தில் பதிவிறக்கம் செய்து ,பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் மே 1ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

News March 4, 2025

20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

image

சேத்துப்பட்டு நிர்மலா நகரை சேர்ந்த சகாயராஜ் (40) மீது 2005இல் அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 20 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவர் கர்நாடக மாநிலம் ஒயிட்பீல்டில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அனுப்பினர்.

News March 4, 2025

திருவண்ணாமலை: 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்

image

செய்யாறு பகுதியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இவர், அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். காரணை கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் (60), சிறுமியை தொடர்ந்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி ஏழு மாத கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து முதியவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

News March 4, 2025

விளையாட்டு உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் இன்று (03.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு விடுதியைச் சேர்ந்த 101 மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

News March 3, 2025

குழந்தை வரம் அருளும் பாலமுருகர்

image

போளூர் அருகே இயற்கை எழில் சூழ்ந்த சம்பந்தகிரி மலைகளுக்கு அருகே அருணகிரிநாதரால் போற்றிப்பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. குறிப்பாக இத்தலத்தில் பத்து நாள் திருவிழாவாக நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவில் ஸ்ரீ பால முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தில் ஐதீகமாகவே உள்ளது. இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!