Tiruvannamalai

News March 11, 2025

தமிழ் தெரிந்தால் அரசு வேலை! நாளை கடைசி நாள்

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நாளை வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பியுங்கள்

News March 11, 2025

மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாசி மாத பவுர்ணமி திதி வருகின்ற வியாழன் 13ம் தேதி காலை 11:40 முதல், நாளை மறுநாள், 14ம் தேதி பிற்பகல் 12:54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் இந்த நேரத்தில் கிரிவலம் சென்று அண்ணாமலையார் அருள் பெறலாம்.

News March 11, 2025

தி.மலை அருகே ரயில் மோதி முதியவர் பலி

image

திருவண்ணாமலையில் தண்டரை வழியாக செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் கமலேஷ், விழுப்புரம் ரெயில்வே போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா விபத்தா என விசாரணை நடைபெறுகிறது.

News March 10, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (10.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 10, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

image

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் மார்ச்.12 முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல்வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 வரை டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. நேரடியாகவோ (அ) 04175-233381 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தங்கள் பெயரைப்பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க. 

News March 10, 2025

தி.மலை: மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், இன்று (10.03.2025) திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில், அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

News March 10, 2025

அம்மையை குணமாக்கும் ரேணுகாம்பாள்

image

தி.மலை மாவட்டம் படவேடு கிராமத்தில் பிரசித்திபெற்ற ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 6.40 மணி முதல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் 3 அல்லது 5 நாட்கள் தங்கி சேவை செய்தால் அம்மை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், திருமாண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News March 10, 2025

பரோடா வங்கியில் வேலை: நாளையே கடைசி

image

பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 10, 2025

மின்வேலியை மிதித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

image

சென்னை தனியார் நிறுவன ஊழியரான சுந்தரமூர்த்தி (22), திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே செங்குணம் கிராமத்தில் தன்னுடன் பணிபுரிபவரின் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அப்போது குளிக்கச் சென்றபோது அவர் எதிர்பாராத விதமாக மின்வேலியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News March 9, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (09.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!