India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில், இன்று (மார்ச். 27) காலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார்.
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் நாகநதி ரெயில்வே பாலத்தின் அருகே தண்டவாளம் வழியாக நேற்று காலை ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற விரைவு ரெயிலில் அவர் அடிபட்டு இறந்தார்.மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவர்கள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் ஏப்ரல் 6 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாநில அளவிலான தேர்வுகள் ஏப்ரல் 8 காலை 7 மணிக்கு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர் கோவில் உள்ளது. இத்தலத்தில் ராமர் அமர்ந்த நிலையில் இருப்பது சிறப்பு. இங்கு வந்து வழிபட்டால் திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றிற்காகவும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
நெற்றியில் இடுவதற்குப் பயன்படுத்தப்படும் நாமக்கட்டியைத் தயாரிப்பதில் ஜடேரி கிராமம் புகழ்பெற்றது. இந்த நாமக்கட்டி திருவண்ணாமலையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகும். இங்கு தயாரிக்கப்படும் நாமக்கட்டி, திருப்பதி கோயில் உட்பட பல்வேறு வைணவத் திருத்தலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இது புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இந்த தொழிலை நம்பி 150 குடும்பங்கள் உள்ளது. தி.மலையின் பெருமையை ஷேர் செய்யுங்கள்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் வகையில் வரும் 2030 ஆண்டிற்குள் தமிழகத்தில் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தர திட்டமிடப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் 5000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை அலுவலக வேலை நாள்களில் 7401703484 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
வெம்பாக்கம், கீழ்நெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (26). இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சிறுமியை வீட்டை விட்டு அவர் வெளியேற்றியுள்ளார். இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் செய்யாறு இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அர்ஜுனனை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
தி.மலை மாவட்ட உற்பத்தி மற்றும் சேவை தொழில்களில் தொழில்நுட்ப வல்லுனராக சேர ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு இலவசமாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு10th பாஸ் போதும். 18 முதல் 23 வயது உடைய ஆண்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். இதற்கு 15000 -20000 ஊதியம் வழங்கப்படும். தங்குமிடம், உணவு முற்றிலும் இலவசம். விவரங்களை<
Sorry, no posts matched your criteria.