Tiruvannamalai

News November 14, 2024

டயர் வெடித்து கார் கவிழ்ந்து விபத்து

image

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பெங்களூரை நோக்கி சென்ற கார் செங்கம் அருகே கோனாங்குட்டை கேட் தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 14, 2024

தி.மலையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

image

சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கவும், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக முழக்கங்களை எழுப்பினர்,

News November 14, 2024

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்கும் பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு புறப்படும் (வ.எண். 06130) முற்பகல் 11 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.

News November 14, 2024

மாவட்ட அளவிலான திருக்குறள் ஒப்பு வித்தல் போட்டி

image

போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நேற்று நடைபெற்றது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவிலான 20 பள்ளிகளைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவிகள் 75 பேர் பங்கேற்றனர். போட்டிக்கு நடுவர்களாக விஐடி பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்கள் இருந்தனர்.

News November 14, 2024

இந்து சமய அறநிலைத்துறை நிகழ்ச்சியில் துணை சபாநாயகர்

image

இந்து சமய அறநிலை துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் மண்டபங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார். அதனை திருவண்ணாமலை அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் அறநிலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எம்பி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

News November 14, 2024

இரவு ரோந்து விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (13.11.2024) புதன் கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் மற்றும் தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். 

News November 13, 2024

பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருவண்ணாமலை பௌர்ணமி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டும் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் 15ஆம் தேதி 460 பேருந்துகள் மற்றும் 16ஆம் தேதி 245 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து நவம்பர் 15,16 தேதிகளில் 81 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

News November 13, 2024

தி.மலை: பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. எம். சுதாகர் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்வு, சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று (13.11.2024), நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டாா்.

News November 13, 2024

கூடுதல் ரயில்கள் இயக்க அமைச்சர் வலியுறுத்தல்

image

தி.மலை அண்ணாமலையார் கார்த்திகை தீப திருவிழாவுக்காக உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர இருப்பதால் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் எவ.வேலு வலிறுத்தியுள்ளார்.

News November 13, 2024

தி.மலையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க