India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
தி.மலை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 131 அங்கன்வாடி பணியாளர், 54 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 254 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 439 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th பாஸ் போதும். ஆர்வமுள்ளவர்கள், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் 23.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க*.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை திட்டத்திற்காக மே 31க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தர்பகராஜ் தெரிவித்தார். பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டு பதிவு செய்தவர்களுக்கு தகுதி உள்ளது. வயது மற்றும் வருமான வரம்பு உண்டு. tnvelaivaaippu.gov.in-இல் ஆன்லைனில் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.
திருவண்ணாமலை சாரோன் பகுதியில் சீனு என்பவர் கார் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவரை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தனிப்படை அமைத்து கொலை செய்தவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் என்னும் கிராமத்தில், பிரசித்தி பெற்ற வரத ஆஞ்சிநேயர் கோயில் உள்ளது. மன தைரியம் கிடைக்க, சனி தோஷங்கள் நீங்க, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, திருமண தடை நீங்க இங்கு வந்து வழிபடுகின்றனர். மேலும், இது அனைத்தும் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கோயிலில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்ததாக கோயில் ஊழியர் சதீஷ் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோயில் இணை ஆணையர் பரணிதரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குவாரி குத்தகை உரிமம் கோரி இனி வரும் காலங்களில் விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ பெறப்படாது. அரசு வழிகாட்டுதலின்படி, 2025-26 நிதியாண்டில் ஏப்ரல் 7 முதல் விண்ணப்பங்கள் https://mimas.tn.gov.in இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படும் என கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் செயற்கை கைவினைஞர் பணியிடகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள். வயது வரம்பு: 18-32, கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Prosthetics and orthotics பிரிவில் 2 ஆண்டுகள் டிப்ளமோ. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900 வரை. எழுத்துத் தேர்வு கிடையாது. <
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை திருமண ஆசை காட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் செய்யாறு அனைத்து மகளிர் போலீசாரால் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.