India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டத்துக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை தாத்தா முறை கொண்ட நாகராஜ்(83) பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், சிறுமி இரண்டு மாதம் கர்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நாகராஜை போக்சோ வழக்கில் கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்கள் இன்றும் , நாளையும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. ஷேர் செய்யவும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் மற்றும் தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை மாலை 3 மணி அளவில் ஹேண்ட் பால் போட்டி தேர்வு நடைபெற உள்ளது. இதில் 15 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் பங்கு பெறலாம். இதில் தேர்வாகும் 16 மாணவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள 21வது மாநில ஹேண்ட் பால் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மேலும் தகவலுக்கு 96002 96466 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பாக 20 வயதுக்கு உட்பட்ட கபடி வீரர்கள் தேர்வு போட்டி நவம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சே. நாச்சிப்பட்டில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் திருவண்ணாமலை சார்ந்தவர்கள் மட்டும் பங்கு பெறலாம் என கபடி சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
செங்கம் அடுத்த கட்டமடுவு கிராமத்தை சேர்ந்த விமல்(30), அதே பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நேற்று (நவ.14) விமலுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செங்கம் அடுத்த அம்மா பாளையம் அரசு பள்ளியில், நேற்று வழக்கம் போல் மதிய உணவு மற்றும் முட்டை வழங்கி உள்ளனர். இதை சாப்பிட்ட 6ஆம் வகுப்பு மாணவர்கள் 8 பேர், வயிற்று வலியால் துடித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மேல் பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவண்ணாமலையில் இன்று (நவ.15) பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்த தகவலை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பௌர்ணமி காலை 5.40 மணிக்கு தொடங்கி, மறுநாள் 16ஆம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3.33 மணிக்கு நிறைவு பெறுகிறது. எனவே, இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. பௌர்ணமியையொட்டி, சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (14.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் மற்றும் தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.