India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முள்ளண்டிரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவா் 26 ஆடுகளை வளா்த்து வருகிறாா். இவரது நிலம் முள்ளண்டிரம் கிராமத்தின் மலைப் பகுதிக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகள் நிலத்தில் இருந்துள்ளன. நேற்று காலையில் பாா்த்தபோது, இவரது ஆடுகள் 13, மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த சிலரது ஆடுகள் என 20 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. மா்ம விலங்கு கடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (28.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் குறுசிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ2,100 கோடி கடன் வழங்கபடும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜா அறிவித்தார்.அதில் திருவண்ணாமலை, கரூர் மாவட்டங்களில் ஐ.டி.துறையில் தலா 500 பேருக்கு வேலையளிக்க, புதிய மினி டைட்டல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றும் மலை மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களின் ஆக்கிரமிப்புகள் குறித்து, சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் பல துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், கூடுதல் தகவல்களை சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 08.10.2024 மற்றும் 09.10.2024 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் திருவண்ணாமலை மாவட்டத்தில தனியார் மற்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (27.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
விண்ணமங்கலம் செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து இன்று ஆற்று மணல் கடத்தி கொண்டு ஆரணி சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் நெசல் கூட்ரோடு அருகே வந்த 6 மாட்டு வண்டிகளை ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மாட்டு வண்டிகளை ஆரணி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு மாட்டு வண்டி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பண்ணைக் குட்டைகள், மண் வரப்பு அமைத்தல், கல் வரப்பு அமைத்தல், தோட்டக்கலைத் துறை செடிகள் வளா்த்தல், தனிநபா் நிலங்களில் பல்வகை மரங்கள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் செப்.30 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 61.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதில், அதிகபட்சமாக கலசப்பாக்கம் 17 மி.மீ, குறைந்தபட்சமாக செய்யார் 1 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 12 மி.மீ, தண்டராம்பட்டு 11 மி.மீ, போளூர் 7.5 மி.மீ, திருவண்ணாமலை 6.6 மி.மீ, செங்கம் 2.2 மி.மீ, வெம்பாக்கம் 2.0 மி.மீ, சேத்பட் 1.4 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.