Tiruvannamalai

News October 1, 2024

தி.மலை அருகே இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்

image

தண்டராம்பட்டு அடுத்த மழுவம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் மகன் ரோஷித்(7), குபேந்திரன் மகன் தருண்(7) இரு சிறுவர்களும் விளையாட வெளியே சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்ற சிறுவர்களிடம் விசாரித்தனர். அதில் குளிப்பதற்காக கிணற்றிற்கு சென்றது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்தபோது இருவரும் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் உள்ளது.

News October 1, 2024

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கள்ளச்சாரயம் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (30.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 30, 2024

இரவு ரோந்து போலீஸ்சார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (30.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 30, 2024

வானில் பறந்த சிறிய ரக செயற்கைகோள்

image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரி (ULOG3) மாணவர்கள் குழுவினர் ரூபாய் 25,000/- செலவில் தயாரிக்கப்பட்ட 500 கிராம் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோளை ஹீலியம் பலூன் உதவியுடன் வானில் இன்று பறக்கவிட்டார்கள். இந்நிகழ்வில், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 30, 2024

செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் மாவட்ட நிபுணர் குழு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் அச்சத்துடன் உள்ளனர்.மேலும் இதுகுறித்து நிபுணர் குழு ஆய்வு குழு மோப்ப நாயுடன் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செங்கம் பகுதி பரபரப்பாக உள்ளது

News September 30, 2024

தி.மலை அருகே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வார இறுதி விடுமுறை நாளான நேற்று 36 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. வெளிமாநில பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், நகரில் வாகன நெரிசலும் காணப்பட்டது.

News September 30, 2024

திருவண்ணாமலையின் வரலாற்றை கூறும் அருங்காட்சியகம்

image

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தின் கீழ் இயங்கி வருகிறது திருவண்ணாமலை மாவட்ட அருங்காட்சியகம்.இந்த அருங்காட்சியகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தா.மோட்டூர் தொடங்கி 8ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த துர்க்கையின் புடைப்புச் சிற்பங்கள், நடுகற்கள், புத்தர் உருவங்கள் எனப் பலவகை சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

News September 29, 2024

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (29.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் கொடுக்கபட்டுள்ளது.

News September 29, 2024

திருவண்ணாமலை கட்சியினருக்கு உத்தரவிட்ட அமைச்சர்

image

திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், பணிக்குழு நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோர் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணியில் விரைந்து ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை விடுத்துள்ளார்.

News September 29, 2024

திருவண்ணாமலை அருகே பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு

image

கலசபாக்கம் அடுத்த தென்மாகதேவ மங்கலத்தில் தேவராயன் பாளையம் சீனந்தல் ஆகிய பகுதிகளில் விஜயநகர கால ஆறு நடு கற்களையும், இரண்டு கல்வெட்டுகளையும் நேற்று ஆய்வு நடுவம் சார்பில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று ஆய்வு நடுவத்தில் நிர்வாகிகள் பாலமுருகன், பழனிச்சாமி, விநாயகம், ராஜா, சிவா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.