Tiruvannamalai

News March 10, 2025

தி.மலை: மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், இன்று (10.03.2025) திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில், அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

News March 10, 2025

அம்மையை குணமாக்கும் ரேணுகாம்பாள்

image

தி.மலை மாவட்டம் படவேடு கிராமத்தில் பிரசித்திபெற்ற ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 6.40 மணி முதல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் 3 அல்லது 5 நாட்கள் தங்கி சேவை செய்தால் அம்மை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், திருமாண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News March 10, 2025

பரோடா வங்கியில் வேலை: நாளையே கடைசி

image

பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 10, 2025

மின்வேலியை மிதித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

image

சென்னை தனியார் நிறுவன ஊழியரான சுந்தரமூர்த்தி (22), திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே செங்குணம் கிராமத்தில் தன்னுடன் பணிபுரிபவரின் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அப்போது குளிக்கச் சென்றபோது அவர் எதிர்பாராத விதமாக மின்வேலியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News March 9, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (09.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2025

மனத்துயரம் நீக்கும் கனககிரீசுவரர்

image

தி.மலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற கனககிரீசுவரர் கோவில் உள்ளது. மலை மீது உள்ள இந்த கோவிலில் ஒரே கருவறையில் 2 சிவ லிங்கங்கள் உள்ளது. வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, மனத்துயரம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால், மொட்டை அடித்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செய்கின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 9, 2025

தமிழ்நாடு பொது சுகாதார துறையில் சூப்பர் வேலை

image

தமிழ்நாடு பொது சுகாதார துறையில் 126 பணியிடங்கள் சென்னையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 8th, B.Sc, DMLT, M.Sc போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ.8,500- 21,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 11-03-2025. யூஸ் பண்ணிக்கோங்க. மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 9, 2025

இறந்தவர் உடலை புதைக்க இடம் இல்லாததால் தர்ணா

image

திருவண்ணாமலை மாவட்டம், தேசூரை அருகே பாஞ்சரை கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த காசி என்பவர் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரின் உடலை புதைக்க இல்லாததால் 50 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். வந்தவாசி காவல்துறையினரும் வருவாய் துறையினரும் பேச்சு வார்த்தை நடத்தி, மயானத்திற்கு இடம் ஒதுக்குவதாக உறுதி அளித்தனர். பின்னர், அவர்கள் ஊரில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உடலை புதைக்க அவர் குடும்பத்தினர் சம்மதித்தனர்.

News March 8, 2025

பெண்களுக்கு சுகப்பரசவம் ஆக இங்கு செல்லுங்கள்

image

தி.மலை மாவட்டம் தூசி அருகில் திருக்குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும் எமன் முட்டம் (காகம்) வடிவிலும் வழிபட்ட தலம் இது. பாவ விமோசனம், ஞானம், அறிவு திறன் பெற, சனிதோஷம் நீங்க இங்கு வழிபடுகின்றனர். கர்ப்பிணி பெண்கள் இங்கு வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 8, 2025

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் மகளிர் தின வாழ்த்து

image

உலகம் முழுவதும் இன்று (08-03-2025) மகளிர் தின விழாவை கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் மகளிர் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!