Tiruvannamalai

News March 20, 2024

ஆரணி : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச்.20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதன்படி ஆரணி தொகுதியில் வேட்பாளராக கஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

News March 19, 2024

தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்

image

ஆரணி நாடாளுமன்ற தொகுதி
ஆரணி திமுக கட்சியின் சட்டமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆரணி தொகுதி பொறுப்பாளர் அன்பழகன் அவர்களின் தலைமையில் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் தட்சிணாமூர்த்தி, ஜெயராணி ரவி, ஆரணி நகர மன்ற தலைவர் துரைமாமது மற்றும் கழக நிர்வாகிகள், பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News March 19, 2024

செய்யாறு அருகே விவசாயி உயிரிழப்பு

image

செய்யாறு அருகே பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பார்த்தசாரதி.
இவர் சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பல இடங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் குணமாகாததால் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 19, 2024

விவசாயியை தாக்கிய 4 பேரை தேடும் போலீசார்

image

ஆரணி அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியில்
நேற்று முன்விரோதம் காரணமாக நரசிம்மன் கோவிந்தசாமியின் நிலம் அருகே மாடுகளை கொண்டு செல்லும் போது நரசிம்மனுக்கும் கோவிந்தசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நரசிம்மன் தனது மகன்கள் தினேஷ், வேலு சாந்தமூர்த்தி ஆகியோர் சேர்ந்து கோவிந்தசாமியை பலமாக தாக்கி உள்ளனர்.

நேற்று ஆரணி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயியை தாக்கிய 4 பேரை தேடி வருகின்றனர்.

News March 19, 2024

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளையும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News March 19, 2024

பாஜக – பாமக கூட்டணி கையெழுத்தானது

image

பா.ஜ.க – பா.ம.க கூட்டணி ஒப்பந்தம் குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. இந்த 10 தொகுதிகளில் ஆரணி தொகுதி பா.ம.க விற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 19, 2024

வந்தவாசி: அனுமந்த வாகனத்தில் சுவாமி திருவீதி உலா

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று(மார்ச்.18) அனுமந்த வாகனத்தில் அருள்மிகு ஶ்ரீ ரங்கநாத பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தனர்.

News March 18, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தி.மலை, ஆரணி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் சந்தேகத்திற்கிடமாக ரூ. 1 லட்சம் மேல் பரிவர்த்தனை மற்றும் ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட பணம் பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News March 18, 2024

வந்தவாசி அருகே விவசாயி தற்கொலை

image

வந்தவாசி அடுத்த சிங்கப்பள்ளி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலன் விவசாயி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் பாலன் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்தார். அவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலன் இறப்பு குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!