Tiruvannamalai

News April 10, 2024

பெண்களுக்கு மோர் வழங்கிய ஆட்சியர்

image

செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராம பணிப்பெண்களிடம் 100 % வாக்களிப்பது குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.   வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி பணிப்பெண்களுக்கு மோர் வழங்கினார். இதில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தீபசித்ரா , வட்டாட்சியர்கள் முருகன், ரேணுகா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News April 10, 2024

தி.மலை: வேட்பாளர் பெயர் பொருத்தும் பணி தீவிரம்

image

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாட்களாக தி.மலை சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருவதை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (10.04.2024) ஆய்வு செய்தார்.

News April 10, 2024

ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பட்டு நூல் கொண்டு விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர்கள் மூலம் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பட்டு நூல் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகம் நெய்யப்பட்ட புடவையை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (ஏப்.10) வெளியிட்டார்.

News April 10, 2024

102 டிகிரியில் கொளுத்திய வெயில்

image

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. திருவண்ணாமலையை ஏற்கனவே அக்னி ஸ்தனம் என கூறப்படும் நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று 102 டிகிரியாக வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2024

கட்சி கொடிகளை அகற்றிய தேர்தல் பறக்கும் படையினர்

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொழாவூர் , பெரணம்பாக்கம் , ஆத்துரை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அகற்றப்படாமல் இருந்த கட்சிக் கொடிகளை தேர்தல் பறக்கும் படையினர் முனியப்பன் தலைமையிலான குழுவினர் அகற்றினர். இந்நிகழ்வின் போது தலைமை காவலர் மோகனா, காவலர்கள் அனுசுயா பிரசாந்த் ஒளிப்பதிவாளர் சேட்டு மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News April 9, 2024

வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி

image

தி.மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (09.04.2024) ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News April 9, 2024

தி.மலையில் 102 டிகிரி வெப்பம்

image

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்கள் குடை பிடித்துக் கொண்டும், ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்; 38.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News April 9, 2024

தி.மலை: சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

image

ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலசுப்ரமணியன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

News April 9, 2024

சித்ரா பெளர்ணமி பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்

image

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த நிலையில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சித்ரா பெளர்ணமி விழாவிற்கு 2400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News April 9, 2024

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

image

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க பிப்.9 முதல் மார்ச்.16 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க முடியாதவர்களின் நலன் கருதி இன்று மற்றும் நாளை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!