Tiruvannamalai

News April 15, 2024

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

image

போளூரில் உள்ள திமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில், இன்று (15.04.2024), பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வே.கம்பன் முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News April 15, 2024

தி.மலை அருகே விபத்து: 2 பேர் பலி

image

கண்ணமங்கலம் பகுதியில் நேற்று வெவ்வேறு சாலை விபத்தில் இரண்டு பெண்கள் பலி. போளூர் அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம் பெண் கோவிலுக்கு சென்று திரும்பிய போது தி.மலை வேலூர் சாலையில் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆரணி சைதாப்பேட்டை சசிகலா என்ற பெண் கொங்கராம்பட்டு பகுதியில் நிலைத்தடுமாறி விழுந்து உடல் நசுங்கி பலியானர். விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News April 15, 2024

காவலர்களுக்கான வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி

image

தி.மலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தொகுதி காவல் மேற்பாா்வையாளா் பாட்டுலா கங்காதா், தி.மலை மக்களவைத் தொகுதிக்கான பொது மேற்பாா்வையாளா் மகாவீா் பிரசாத் மீனா, ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News April 14, 2024

திருவண்ணாமலை: சீமான் தேர்தல் பிரச்சாரம்

image

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாக்கியலட்சுமி ஆதரித்து அவருக்கு ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தில் வாக்களிக்க கோரி சேத்பட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், ஏராளமான கட்சிக்காரர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News April 14, 2024

திருவண்ணாமலை: 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, மின்கம்பத்தில் மோதி, அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் – ஏம்பலம் செல்லும் வழியில் இன்று மதியம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த வயலில் தலைகீழாக கவிழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 14, 2024

அண்ணாமலையார் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

image

தி.மலையில் கிரிவல பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை மாதம் 1 ஆம் தேதியன்று காலையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதன்படி இன்று காலை லிங்கத்தின் மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. அதனை காண அதிகாலையில் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

News April 14, 2024

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

News April 14, 2024

செல்பி பாயிண்டில் சுயப்படம் எடுத்த கலெக்டர்

image

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சியில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று (13.04.2024) தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் செல்பி பாயிண்டில் சுயப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News April 13, 2024

20 ஆண்டு சிறை தண்டனை: அதிரடி உத்தரவு

image

வந்தவாசி அடுத்த பெரிய புறக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 2020ஆம் வருடம் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வண்புனர்வு செய்ததால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி பார்த்த சாரதி அவர்கள், செல்வகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

News April 13, 2024

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

image

தி.மலையில் தேர்தல் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க புகார் எண்களை ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சீ. மீனாட்சி (9710825341), தொழிலாளர் உதவி ஆய்வாளர் த. சாந்தி (952308664), ஆ. ஆத்திப்பழம் (9442965035) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!