Tiruvannamalai

News April 16, 2024

தி.மலையில் 102.2 டிகிரி பாரன்ஹீட்

image

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 102. 2டிகிரி பாரன்ஹீட், 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News April 16, 2024

தி.மலை அருகே விபத்து; பலி

image

போளூர் அடுத்த கேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவர் உடல் நலக்குறைவால் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது, தச்சாம்பாடி பேருந்து நிலையம் அருகே குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

News April 16, 2024

விபத்தில் ஒருவர் பலி

image

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வெங்கடாஜலபதி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு சேத்துப்பட்டு கண்ணனூர் சாலை ஏரிக்கரை ஓரம் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு இவர் உயிரிழந்தார். இது குறித்து சேத்துப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 16, 2024

வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

image

அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையையொட்டி திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தேரடி வீதியில் 20 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை. ராஜ்நாத் சிங் வந்திறங்கும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 16, 2024

ரூ.32 கோடியில் வளர்ச்சி பணிகள் – எ.வ.வேலு

image

செங்கம் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு திமுக ஆட்சியில் ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளா் அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சா் எ.வ.வேலு செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் செங்கம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது எனக் கூறினார்.

News April 16, 2024

பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று சித்திரை வசந்த உற்சவத்தின் 2 ஆம் நாள் அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News April 15, 2024

சித்ரா பௌர்ணமி: ஆலோசனை

image

சித்ரா பௌர்ணமியையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 15, 2024

தி.மலை: வான்வழி சாகச நிகழ்ச்சி

image

2024 மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு அரங்கில் வான்வழி சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News April 15, 2024

தி.மலை: குழப்பத்தில் தவிக்கும் அதிமுக, பாமக

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் தொகுதியில் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் அதிமுக மற்றும் பாமக கட்சியின் இருந்து முக்கிய நிர்வாகிகள், இளைஞர்கள் எ.வ.கம்பன் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். தேர்தல் நேரத்தில் கட்சி மாறியதால், பாமக, அதிமுகவினரிடையே பெரும் குழப்பம் நீடித்துள்ளது.

News April 15, 2024

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

image

போளூரில் உள்ள திமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில், இன்று (15.04.2024), பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வே.கம்பன் முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!