India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.
புகழ் பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவத்தின் நேற்று நான்காவது நாள் இரவு திருவிழாவில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனைகள் நடைபெற்று. பின் சுவாமி மீது பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று(ஏப்.17) திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 102.2 டிகிரி பாரன்ஹீட்(39 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போயினர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் முறை வாக்காளர்களுக்கான தூதுவர்களை இன்று(17.04.2024) நியமித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், அரசு அலுவலர்கள் இருந்தனர்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து இன்று(ஏப்.17), தி.மலை நகரின் முக்கிய வீதிகளில் வாகனம் மூலம், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது திமுகவினர் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை, மாலை மற்றும் வெற்றிவேல் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவண்ணாமலையில் சித்திரா பௌர்ணமியின் போது அன்னதானம் வழங்க இன்று (17.04.2024) முதல் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் அன்னதானம் வழங்க விரும்புவோர் மேலும் விவரங்களுக்கு 9047749266, 9865689883 ஆகிய எங்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வரும் 23 ஆம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24 ஆம் தேதி அதிகாலை 5.47 மணி வரை சித்திரா பௌர்ணமி கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே அன்று
கட்டணமில்லாமல் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.50 சிறப்பு கட்டண சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி விழா வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி சித்ரா பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை 05.47 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த செங்குணம் சாலையில் ஒன்றியப் பொறியாளா் ஜெயந்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 48 வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கார் ஓட்டுநர் காமராஜை (48) போலீசார் கைது செய்த நிலையில் காா்,மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வரும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி, எல்இடி டிவி மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.