Tiruvannamalai

News March 23, 2024

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

image

திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில் தெருவில் தேர்தல் குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆட்சியர் கலந்துகொண்டு அப்பணியை தொடங்கி வைத்தார்.

News March 23, 2024

பங்குனி உத்திர மகா தேரோட்டம் 

image

ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில்  அமிர்தாம்பிகை உடன் சந்திரசேகர சாமி அமர்ந்து காமக்கூர் கிராமத்தில் முக்கிய வீதிகளில் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மலர்களை தூவி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

News March 23, 2024

தி.மலை: சிறுமி கர்ப்பம்: கொடூரம்

image

செய்யாறு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சின்னராசு என்பவர் 10ஆம் வகுப்பு மாணவியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், மாணவி கர்ப்பமான நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செய்யாறு மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னராசுவை தேடி வருகின்றனர். இவர் 2 குழந்தைக்கு தந்தை என்பதும் மாணவிக்கு சித்தப்பா முறை என்பதும் தெரியவந்துள்ளது. 

News March 23, 2024

போளூர்: மலை கோயிலில் சிறப்பு பூஜை

image

போளூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சம்பத்கிரி மலையில் உள்ள சுயம்பு லட்சுமி நரசிம்மர் கோயிலில் இன்று காலை லட்சுமி நரசிம்மர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் 940 படிக்கட்டுகளை ஏறி கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர்.

News March 23, 2024

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த ராமு மற்றும் அவரது மனைவி மீனா இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் ராமுவை கொலை செய்த ராமுவின் தாய் மாமன் ஆறுமுகம் என்பவர் மீது நடைபெற்ற வந்த கொலை வழக்கில் ஆரணி கூடுதல் அமர்வு நீதிபதி திருமதி விஜயா  ஆயுள் தண்டனை விதித்து நேற்று(மார்ச்.22) தீர்ப்பளித்தார்.

News March 23, 2024

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

image

திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயணம் செய்ய, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

திருவண்ணாமலை அருகே சோகம்

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, விளாப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர்களுக்கு  திருமணம் ஆன நிலையில் குழந்தைகள் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தியா நேற்று மாலை  வீட்டில் தனியாக இருந்த போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2024

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா

image

வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பொது தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி பெற வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு மாதங்களாக மாலை நேர சிற்றுண்டி வழங்கிய முன்னாள் மாணவர்கள் சேதுராமன், ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

News March 22, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

தி.மலை பங்குனி மாத பவுர்ணமி அன்று பங்கு உத்திரமும் வருகிறது. இதனால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதுபோல திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வோரின் அதிகரிக்கும். எண்ணிக்கையும் இதையொட்டி, தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.  பவுர்ணமி மற்றும் உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News March 22, 2024

தி.மலையில் குவிந்த மக்கள் கூட்டம்

image

வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோயிலில் இன்று பிரம்மோற்சவ திருவிழாவின் 7 ஆம் நாள் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருத்தேரில் அமர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்தார். 500க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று தேரை வடம்பிடித்து இழுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

error: Content is protected !!