India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தண்டராம்பட்டு வட்டம் தென்முடியனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு அமைத்திட வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிஎன்பிஎஸ்சி குரூப் முதன்மை தேர்வுக்கு அக்.7ஆம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
அக்.7ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தி.மலையில், தனிநபர்கள் வீட்டில் சிறந்த நூலகம் அமைத்தவர்கள் அக்.10-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம். பராமரிக்கப்படும் நூலகம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3,000 மதிப்பிலான கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நூல்களின் எண்ணிக்கை, வகைகள் உள்ளிட்ட விவரங்கள் சேர்க்க வேண்டும். மேலும் தகவலுக்கு 9976265133 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தி.மலையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார். இந்த முகாமில் 257 அடையாள அட்டை மனுக்கள் பெறப்பட்டு, 154 பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. 15 பேருக்கு பேருந்து பயண அட்டைகள், 10 பேருக்கு ரயில் பயணச் சலுகை, மற்றும் 3 பேருக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன. இதில், 5 வங்கிக் கடன் மனுக்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
லட்சத்தீவு அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சியை நோக்கி வங்கக்கடல் காற்றும் பயணிப்பதால், தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று (அக்.4) தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் ஆர்.டி.ஓ. அலுவலகம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். ஒரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கலில் நேற்று பட்டியலின பிரிவை சேர்ந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய பொதுவழியில் எடுத்துச்சென்றபோது தடுத்து நிறுத்தி மாற்று சமூகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (03.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
செங்கம் அடுத்த ஒரவந்தவாடி கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் (59) என்பவர் கோயம்புத்தூரில் கூலி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவர் சில தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் இருந்து தி-மலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார். தி-மலை காவல் துறையினர் அவரை கைது செய்து செங்கம் காவல் துறையிடம் ஒப்படைதனர்.
திருவண்ணாமலை மாநகரம், 36 ஆவது வார்டு, மாரியம்மன் கோவில் 12 ஆவது தெருவில், திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் புதிய காலிமனை வரி, சொத்து வரி விதிப்பு மற்றும் குடிநீர் இணைப்பு (வைப்புத் தொகை) தொடர்பான சிறப்பு முகாம் இன்று (03.10.2024) நடைபெற்றது. இம்முகாமில், அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாட்டினை மாநகராட்சி அலுவலர்கள் செய்திருந்தனர்.
Sorry, no posts matched your criteria.