India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கை குழந்தையுடன் வரும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று சாமி தரிசனம் செய்ய வைத்தார். இந்த நிகழ்வில் எஸ்.பி கார்த்திகேயன், அறங்காவலர் குழு தலைவர் ஜீவா உள்பட பலர் உடன் இருந்தனர்.
கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அந்த பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும் ஒரு மாணவியை கட்டிப்பிடித்து திருமணம் செய்து கொள்வதாக தகராறு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் மோகன் ராஜுவை கண்ணமங்கலம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் அசோக்குமார், சந்திரகலா என்பவருடைய கோழிப் பண்ணை கொட்டகையின் மேலே சென்ற மின் கம்பிகள் உரசியதில் கோழி பண்ணை மீது தீப்பொறிகள் பட்டு கடும் தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் இருந்த 100 க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் எரிந்து நாசமாகியது.
ஆரணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் கடும் சேதாரம் தவிர்க்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 17 வயது சிறுமிக்கு அவருடைய அக்காள் கணவர் திருவிழாவின் நேரத்தின் போது வீட்டிற்கு வந்து சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அக்காள் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திமுக மாவட்ட துணைச் செயலாளரும்,
செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு.பெ.கிரி தலைமையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் C.N.அண்ணாதுரை, திமுக நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதில் ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திருவண்ணாமலையில் DR இரா.ரமேஷ் பாபு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தி.மலை பெரியார் நகரில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சத்துமாவுடன் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட பாட்டிலினை மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று வழங்கினார்.
வேங்கிக்கால் ஓம் சக்தி நகரில், 2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளி வாக்களிக்க ஏதுவாக அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று 12-னு படிவத்தினை இன்று (23.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
செங்கம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மக்களவை தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
திருவண்ணாமலை, வேங்கிக்கால் பேருந்து நிலையம் அருகே, அன்னை அஞ்சுகம் நகரில் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக நேரில் சென்று 12-D படிவத்தினை இன்று (23.03.2024) மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். இதில், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.