India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஆரணி, சேவூர்,கண்ணமங்கலம் எஸ்வி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் வெயிலின் தாக்கத்தை தணிக்க இலவச தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமையில் மாஜி அமைச்சர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சங்கர், அசோக் குமார் பாண்டியன் பாரி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதில்
முன்னாள் அமைச்சர், ராமச்சந்திரன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
திருவண்ணாமலைக்கு 03-05-2024 முதல் தினசரி ரயில் சென்னை கடற்கரையில் மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு போளூர் வழியாக இரவு 12.05 மணிக்கு தி.மலை வந்தடையும். தி.மலையில் அதிகாலை 04.00 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 09.50 மணிக்கு சென்றடையும். இவ்வாறு திருவண்ணாமலைக்கு தினசரி ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம். குறிப்பாக பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கிரிவலம் சென்றனர். அதில் பக்தர்கள் பயன்படுத்திய குடிநீர் பாட்டில், பிளாஸ்டிக் பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை கிரிவல சாலையில் சிதறி கிடந்த நிலையில் அதனை இன்று நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசுவதை தவிர்க்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் கோயில் பிரகாரத்தை சுற்றி வீதி உலா நிகழ்வும், மகா தீபாராதனையும் நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்தம்,பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கு கோடைகால இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இன்று (24.04.2024) மாணவர்களுக்கு பாடல் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் பாடல்களை பாடினர்.
திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமி கிரிவலம் நேற்று தொடங்கியது. இதில் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது கடுமையான கூட்ட நெரிசலுக்கு இடையே, நோயாளி இல்லாமல் சைரன் ஒலித்தப்படி ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்ஸை அட்சியர் பாஸ்கர பாண்டியன் நிறுத்தி கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.
தி.மலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தி.மலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், கீழ்நாச்சிப்பட்டு என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175-254793, 9942011945 என்ற எண்களிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தொடா்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.