Tiruvannamalai

News May 2, 2024

விடுமுறை அளிக்காத 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தேசிய விடுமுறை நாளான மே.1 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள். உணவு, வணிக நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்திய 91 நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 28 நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 40 என 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

ஆரணி: சினிமா பாணியில் விரட்டிய போலீஸ்

image

போளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்து வந்த நபர்களை சினிமா பாணியில் போலீசார் நேற்று விரட்டிச் சென்று பிடித்தனர். இதில் இரண்டு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள், ஆம்னி கார் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் பரத்குமார்,சிவக்குமார் மற்றும் சுரேஷ்பாபு ஆகியோரை கைது செய்தனர்.

News May 1, 2024

தி.மலை டூ சென்னை கடற்கரை ரயில் ஒத்திவைப்பு

image

சென்னை கடற்கரை to திருவண்ணாமலை தினசரி ரயில் நாளை 02.05.2024 முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
தற்போது செயல்பாட்டுக் காரணங்களால் மேலும் ஆலோசனை வரும் வரை இந்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெறப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News May 1, 2024

தி.மலையில் அதிகபட்ச வெப்பநிலை 107.6 டிகிரி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில்
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 107. 6 டிகிரி பாரன்ஹீட், 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News May 1, 2024

கலசப்பாக்கம்: சரமாரி கத்திக்குத்து

image

கலசபாக்கம் அடுத்த முத்தரசம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது சகோதரர் ரமேஷ்.  இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சுரேஷை வழிமறித்த ரமேஷ் அவரை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

News May 1, 2024

திருவண்ணாமலை: மழைக்கு வாய்ப்பு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 1) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (8 மணி வரை ) திருவண்ணாமலையில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

களையிழந்த சாத்தனூர் அணை பூங்கா

image

செங்கம் அடுத்துள்ள சாத்தனூர் அணை சுற்றுலா இடத்திற்கு வழக்கமாக கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் குழந்தைகள் வருவது வழக்கம். கோடை வெயிலின் உக்கிரம் உச்சத்தில் இருக்கும் நிலையில், சாத்தனூர் அணையில் மக்கள் நடமாட்டம் இன்றி பூங்காக்கள் களை இழந்து காணப்படுகிறது.

News May 1, 2024

போலி மருத்துவர் சிறையில் அடைப்பு

image

ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் இரும்பேடு பகுதியை சேர்ந்த அமீன் தாஸ் தகிர் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவம் பயிலாமல் லேப் டெக்னீசியன் முடித்து மருத்துவராக மருத்துவம் பார்த்து வந்த அமீன் தாஸ் தகீரை, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஆரணி போலீசார் நேற்று(ஏப்.30) இரவு  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 1, 2024

தி.மலை: கோடைகால நீச்சல் பயிற்சி

image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குறைந்த கட்டணத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் ரூ.1500. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

News May 1, 2024

ஒரே கடையில் 80 கிலோ நெகிழி பறிமுதல்

image

செங்கம் தனியார் மண்டப வாடகை வணிகத்தில் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 80 கிலோ நெகிழி பிளாஸ்டிக் பைகளை மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் பிரேம்குமார், தேர்வுநிலை பேரூராட்சி ஆய்வாளர் சொக்கநாதன் மற்றும் பணியாளர்கள் நேற்று அதிரடியாக பறிமுதல் செய்து ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

error: Content is protected !!