Tiruvannamalai

News October 6, 2024

திருவண்ணாமலையில் நேர்காணல்

image

திருவண்ணாமலையில் உள்ள நீதிமன்றத்தில் புதியதாக அலுவலக பணியாளர்கான நேர்காணல் 6.10.2024 இன்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான நேர்காணல் கூட்டத்தில் சுமார் 200 பேர் கொண்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இன்று ஒரே நாட்களிலேயே தட்டச்சு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தனி நபர் நேர்காணல் நிகழ்வும் நடைபெற்றது.

News October 6, 2024

14-ஆம் நூற்றாண்டு நாகக்கன்னி புடைப்புச் சிற்பங்கள் கண்டெடுப்பு

image

திருவண்ணாமலை, செய்யாறு அருகே பெருமாந்தாங்கல் கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகக்கன்னி புடைப்புச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. வரலாற்று ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், இவை விஜயநகர காலத்துக்கு முந்திய அரிய சிற்பங்கள் என்றும், சிவலிங்கம், நந்தி, விநாயகர் ஆகிய உருவங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இவை தற்போது அம்மன் கோயிலில் வழிபாட்டில் உள்ளன.

News October 6, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த சிறப்பு முகாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்டு அதற்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை இணையத்தில் பதிவு செய்யும் முகாம் நடைபெறவுள்ளது. அந்தந்த தாலுகா அரசு மருத்துவமனைகளில் காலை 10 மணி முதல் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதனை ஷேர் செய்து பிறருக்கு உதவவும்.

News October 6, 2024

கைம்பெண்களுக்கு சுயதொழில் தொடங்க மானியம்.

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வீதம் மானியத் தொகை வழங்கப்படுகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

தி.மலை: இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம்.

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (05.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

திருவண்ணாமலையில் மது குடித்த தொழிலாளி மரணம்

image

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகே உள்ள நேற்று டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த ஆறுமுகம் என்கிற கூலி தொழிலாளி திடீரென்று வலிப்பு வந்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை.

News October 5, 2024

தி.மலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் அக்.15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல் ழேடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், தி.மலை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. மக்களே வெளியே செல்லும் முன் கவனமாக இருங்கள். குடை எடுத்துச் செல்லுங்கள்.

News October 5, 2024

அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலையில் தனிநபர்கள் வீட்டில் சிறந்த நூலகம் அமைத்தவர்கள் அக்.10ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். பராமரிக்கப்படும் நூலகம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3,000 மதிப்பிலான கேடயம், சான்றிதழ் வழங்கப்படும். நூல்களின் எண்ணிக்கை, வகைகள் உள்ளிட்ட விவரங்கள் சேர்க்க வேண்டும். தகவலுக்கு 9976265133 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News October 4, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 4, 2024

பள்ளி மேலாண்மை குழு அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

image

தண்டராம்பட்டு வட்டம் தென்முடியனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு அமைத்திட வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.