India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, திருவண்ணமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை(திருவண்ணமலை), விஷ்னு பிரசாத்(ஆரணி) ஆகியோர் வெற்றி பெற்று எம்பியாகினர். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் பகுதியில் கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலைகளில் போளூர் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் தற்போது தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையில் செல்லும் கார்கள் மற்றும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா மூலம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
திருவண்ணாமலையில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த அவர், அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு பூர்ண கும்பம் மரியாதையுடன் வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆணை பிறப்பித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய அலுவலகத்தில் பொதுப்பணி துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், கிரி, சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன்
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் அருகே செல்ஃபி எடுத்து நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் தி.மலை மாவட்டத்தில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார். மாவட்ட முழுவதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு தேர்தல் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி பங்குனி மாத பௌர்ணமி மார்ச் 24ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10.54க்கு தொடங்கி, மார்ச் 25ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 12.55 மணிக்கு பௌர்ணமி முடிவடைகிறது. எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிநாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் போஸ்டர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கிழித்தெறிந்து அப்புறப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.