Tiruvannamalai

News May 6, 2024

தி.மலை நகராட்சி பெண்கள் மாதிரி பள்ளி 99.42% தேர்ச்சி

image

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி 99.42 % தேர்ச்சி பெற்றுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 693 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 689 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். +2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.

News May 6, 2024

 தி.மலையில் 61 பேருக்கு பணி நியமன ஆணை 

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தொகுதியில் உள்ள பணி பார்வையாளர் மற்றும் இளநிலை தொழில் அலுவலர் நிலையிலான பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு தி.மலை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 61 நபர்களுக்கு தற்காலிக பணி நியமனம் ஆணையினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

News May 6, 2024

தி.மலை: மனம் உருகிய இசைஞானி இளையராஜா 

image

இசைஞானி இளையராஜா தான் இயற்றிய அற்புதம் அற்புதம் அற்புதமே என்ற பகவான் ரமண மகரிஷியின் பாடல்களைப் பாடி மனமுருக சாமி தரிசனம் செய்தார். இன்று நடைபெற்ற ரமணரின் 74-வது ஆராதனை விழாவில் ஆசிரம நிர்வாகிகள் டாக்டர் ரமணன் சிவதாஸ் கிருஷ்ணன், இசைஞானி இளையராஜா, தெலுங்கு திரை நட்சத்திரங்கள் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

News May 6, 2024

தி.மலை: +2 தேர்வில் 99.2% தேர்ச்சி

image

தி.மலை +2 தேர்வில் 249 பழங்குடியின மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தி.மலை மாவட்டத்தில் உள்ள ஏகலைவா பள்ளி மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 251 மாணவ மாணவிகள் எழுதினர். அதில் 249 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். இந்த தேர்ச்சி 99.2% என்பது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

29 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

image

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் நிறுவனம் நடத்திய வளாகத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 29 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ரானே மெட்ராஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி அபிராமிதாசன் மாணவா்களிடையே எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுகளை நடத்தினாா். இறுதியாக 29 போ் வேலைவாய்ப்புக்காக தோ்வு செய்யப்பட்டனா்.இவா்களுக்கான பணி நியமன ஆணைகள் நேற்று வழங்கப்பட்டது.

News May 6, 2024

திருவண்ணாமலை ராமச்சந்திர பெருமாள் கோயில் சிறப்பு!

image

தி.மலை, நெடுங்குன்றத்தில் உள்ளது ராமச்சந்திரபெருமாள் கோயில். 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோயில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டது. கனக விமானம் கொண்ட இந்த கோவிலில் ஐந்து நிலை கோபுரங்களை கொண்டு அமைந்துள்ளது. பிற ராமர் கோயில்களிலிருந்து மாறுபட்டு இருக்க காரணம் இதில் உள்ள ராமர் அமர்ந்த நிலையில் உள்ளார். மேலும், ராமரிடம் வில், அம்பு இருக்காது மற்றும் அனுமன் கர்பகிரகத்துக்குள் இருப்பார்.

News May 6, 2024

திருவண்ணாமலையில் 90.47 பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம் குறைந்த அளிவிலான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

News May 6, 2024

+2 தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவ மாணவிகள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்தலில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு ஆகிய கல்வி மாவட்டங்களில் 124 தேர்வு மையங்களில் 27 ஆயிரத்து 649 மாணவ மாணவிகள் தேர்வினை எழுதினர். அதனை தொடர்ந்து இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதையொட்டி தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

News May 6, 2024

இருசக்கர வாகனம் திருடி செல்லும் சிசிடிவி காட்சி

image

ஆரணி காந்தி நகர் மாதா கோயில் எதிரில் பால் விற்பனை கடைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் பூபாலன் என்பவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் பட்டப் பகலிலேயே திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

News May 5, 2024

தி.மலையில் 158 மாணவர்கள் ஆப்சென்ட்

image

தி.மலை மாவட்டத்தில் 9 மையங்களில் நீட் தேர்வு எழுத 4,005 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று 3,847 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இன்று நடைபெற்ற நீட் தேர்வில்  158 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!