India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மாவட்டத்தில் இன்று பெய்த மழையின் அளவு.
திருவண்ணாமலை 5 மி.மீ, செங்கம் 67.40 மி.மீ, போளூர் 25.20 மி.மீ, ஜமுனாமரத்தூர் 32.00 மி.மீ, கலசப்பாக்கம் 27.00 மி.மீ, தண்டராம்பட்டு 15.20 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 86.00 மி.மீ என மொத்த மழையின் அளவு 257.80 மி.மீ மழை பெய்தது. மழையின் சராசரி அளவு 21.48 செ.மீ ஆகும்.
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குருவிமலை – காலூர் சாலையில் செய்யாற்றின் குறுக்கே ரூ. 9.21 கோடி மதிப்பில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் தீரஜ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ.30.15 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளை மேற்பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை போளூர் வடக்கு ஒன்றியம் படவேடு ஊராட்சியில் கோடைகால கனமழையால் சேதம் அடைந்த 400 ஏக்கர் வாழை தோப்பினை கலசபாக்கம் எம்.எல்.ஏ, பெ.சு.தி.சரவணன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதில் ஒன்றிய செயலாளர் ஆர் .வி சேகர், யூனியன் சார்பாக சாந்தி பெருமாள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி தி.மலை உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 வரை மணி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கடந்த நான்கு நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் கோடை வெப்பத்தில் மின்விசிறி, மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்களை இயக்க இயலாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்வெட்டு குறித்து முறையான அறிவிப்பை வெளியிட அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
வந்தவாசி அடுத்த வடநாங்கூர் கூட்டுச்சாலையில் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து காஞ்சிபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 150 நெல் மூட்டைகளை இன்று காலை ஏற்றிச் சென்ற லாரி வடநாங்கூர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்நிகழ்வில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் உள்ளிட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தி.மலை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தி.மலை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் கடும் வறட்சி ஏற்பட்டு பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடும், கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது .எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.