India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 583 பேர் தேர்வு எழுதியதில் 555 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 95.19 ஆகும். மாணவிகளின் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.
செங்கம் அடுத்த இறையூர் பகுதியை சேர்ந்த 75 வயது கம்சலா என்னும் மூதாட்டி, அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர் போபிக்கும் நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் பாச்சல் காவல் நிலையத்தில் கம்சலாபுகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று இருவரையும் அழைத்து விசாரணை செய்தபோது காவல் நிலையத்தில் கம்சலா மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.51% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 83.79 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 77.81 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் 31ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 86.10 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.27 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்91.22 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
தி.மலை மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் மாணவா்களை ஏற்றிச் செல்லும் போது 50 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்கினாலோ மற்றும் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார். மேலும் தி.மலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களை மாவட்ட அளவிலான குழு கூட்டாய்வு செய்யும் பணியை நேற்று ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு எதிரில் போக்குவரத்து சிக்னல்கள் அமைந்திருக்கும் இடத்தில் காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. இதனால் சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பல இடங்களில் இது போன்ற பசுமை பந்தல் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த ராகவன் நாயர். இவர் சாத்தனூர் அணையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 7ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து, ஓடும் லாரியின் பின் சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி சேத்துப்பட்டு (ம) போளூர் ஆகிய தாலுகாவில் உள்ள 50 தனியார் பள்ளிகளின் 339 பள்ளி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மோட்டார் வாகன ஆய்வாளர் (ம) தீயணைப்பு நிலை அலுவலர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் தனியார் பள்ளி பேருந்துகளை இன்று வருடாந்திர ஆய்வுகளை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கேஸ் இணைப்பு பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களுடைய கேஸ் இணைப்பு ஆவணங்களை சரி பார்க்கும் பொருட்டு தாங்கள் இணைப்பு பெற்றுள்ள கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு சென்று தங்களுடைய கைரேகையை பதிவு செய்து உறுதி செய்து கொள்ளுமாறு கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் அன்னை சமுதாய கல்லூரி மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை மற்றும் ஹோம்கேர் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அன்னை சமுதாய கல்லூரியில் இன்று (9-5-2024) நடைபெறுகிறது. இதில் Diploma,B.Sc Nursing,ANM,GNM படித்த தகுதியுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.மேலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.