Tiruvannamalai

News May 14, 2024

தி.மலை: மாணவிகளின் தேர்ச்சி அதிகம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு 13091 மாணவர்கள் 14276 மாணவிகள், என 27 ஆயிரத்து 367 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 10962 மாணவர்கள், 13369 மாணவிகள் என மொத்தம் 24,331 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதம்83.74%, மாணவிகளின் சதவீதம் 93.65 % ஆக உள்ளது. 3031 பேர் தேர்வாகவில்லை.

News May 14, 2024

தி.மலை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 22ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 22 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 86.19% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 78.49 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.26 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: தி.மலையில் 88.91% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி தி.மலை மாவட்டத்தில் மாணவர்கள் 83.74% பேரும், மாணவியர் 93.65% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 88.91% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 13, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

வந்தவாசி அருகே பொதுமக்கள் சாலை மறியல்

image

வந்தவாசி அருகே கல்குவாரியில் வெடி வைக்கும் போது கற்கள் சிதறியதில் விவசாயி ஆறுமுகம் (58) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனால் கிராம பொதுமக்கள் நேற்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மறையூர் கூட்ரோடு பகுதியில் கிராம பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News May 13, 2024

ஆரணி: மாணவன் பலியான சோகம்

image

ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் வசிப்பவர் பிரவீன் குமார். இவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது தண்ணீரில் மூச்சு திணறல் ஏற்பட்டு துடித்தார். இதனைக் கண்ட நண்பர்கள் இவரை மீட்டு ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். ஆரணி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News May 12, 2024

தி.மலை: அமைச்சரின் மகன் சென்ற கார் விபத்து

image

தி.மலை அடுத்த ஏந்தல் பைபாஸ் சாலையில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ
.வே. கம்பன் சென்ற காரும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கம்பன் சென்ற கார் ரோட்டில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் கம்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரது ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். இருவரும் அருணை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News May 12, 2024

இயற்கை உணவுத் திருவிழா

image

திருவண்ணாமலை மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக இரண்டாம் ஆண்டு உணவுத் திருவிழா மற்றும் விவசாய விளை பொருட்கள் விற்பனை சந்தை நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தினர். இதனை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதில் கலந்துகொண்ட  அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது

News May 12, 2024

மாற்றுத்திறனாளிகள் ஆயுள் சான்று வழங்க விண்ணபிக்கலாம் 

image

தி.மலை மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமாக மாதம் ரூ.2000 உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது 2024 – 2025 ஆண்டிற்கான லைஃப் சர்டிபிகேட் ( Life certificate) தி.மலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் முதல் வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

மாபெரும் ஓவியம், நடன போட்டி

image

திருவண்ணாமலை எஸ்.கே.பி., கல்விக் குழுமத்தின் சார்பில் இன்று செங்கம் நகரில் மாபெரும் ஓவியம், நடனம், பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பர்வின் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!