Tiruvannamalai

News March 25, 2024

திருவண்ணாமலை: பள்ளி பேருந்து விபத்து

image

திருவண்ணாமலை அவலூர்பேட்டை திண்டிவனம் புறவழிச்சாலையில் இன்று காலை தனியார் பள்ளி பேருந்து மற்றும் சரக்கு லாரி கார் ஆகியவை நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி பேருந்தின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

தி.மலை : பாஜக வேட்பாளர் உறுதி

image

தி.மலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ. அஸ்வத்தாமன் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். நான் வெற்றி பெற்றால் தொகுதியில் பயோ-எத்தனால் தொழிற்சாலையை தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பயோ-எத்தனால் தொழில்சாலை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்படும் என்று உறுதியளித்தார்

News March 24, 2024

கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ

image

அத்திமலைப்பட்டு மலைகளில் காட்டுத் தீ பரவி எரிந்து வருகிறது. 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலைப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. மேலும், இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

News March 24, 2024

கீழ்பென்னாத்தூர்: நாளை உதயநிதி வருகை

image

தி.மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை தர உள்ளார். கீழ்பென்னாத்தூர் ஊர் எல்லையில் வரவேற்க திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நகர செயலாளர் அன்பு தெரிவித்தார்.

News March 24, 2024

தி.மலை: அமைச்சர் வாகனத்தில் சோதனை

image

மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் இன்று மாலை 5.30 மணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

News March 24, 2024

செங்கம்: காவலர்களுக்கு வந்த சோதனை

image

செங்கம் காவல் நிலையத்தில் ரோந்து வாகனம் ஒன்று உள்ளது இந்த வாகனங்கள் மூலம் தினமும் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.. இந்நிலையில், ரோந்து வாகனம் அடிக்கடி பழுதாகி தள்ளும் நிலை உருவாகி உள்ளது. இதனால் காவல்துறையினர் ரோந்து பணிகள் சரிவர செய்ய முடிவதில்லை என புகார் எழுந்துள்ளது.

News March 24, 2024

அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு

image

திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (24.03.2024) ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News March 24, 2024

தி.மலை: தாய்மார்களுக்கு முன்னுரிமை

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கை குழந்தையுடன் வரும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று சாமி தரிசனம் செய்ய வைத்தார். இந்த நிகழ்வில் எஸ்.பி கார்த்திகேயன், அறங்காவலர் குழு தலைவர் ஜீவா உள்பட பலர் உடன் இருந்தனர்.

News March 24, 2024

தி.மலை: மாணவிகளிடம் சில்மிஷம்

image

கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அந்த பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும் ஒரு மாணவியை கட்டிப்பிடித்து திருமணம் செய்து கொள்வதாக தகராறு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் மோகன் ராஜுவை கண்ணமங்கலம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

error: Content is protected !!