India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உத்திரமேரூர் களியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநர் குமார். இவர் நேற்று வந்தவாசி அடுத்த ஆர்யாத்தூர் கிராமத்தில் உள்ள நண்பர்களை பார்த்துவிட்டு சாலை ஓரம் உள்ள சிறு பாலத்தின் மீது மது போதையில் உறங்கியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி விழுந்து குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். வந்தவாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்யாறு அருகே அரசு பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட மூன்று சவரன் தங்க நகையை நடத்துனர் வரதராஜன் என்பவர் செய்யாறு பணிமனை கிளை மேலாளர் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து நகையின் உரிமையாளர் விஜயபாலனிடம் நகை ஒப்படைக்கப்பட்டது. நேர்மையுடன் செயல்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ரயில் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக ரயில் நிலையம் செல்லும் வழி பள்ளம் நோண்டப்பட்டு மணல்மேடுகளாக காட்சி அளிக்கப்பட்டது. அவ்வழியே செல்ல மிக கடினமாக இருந்தது. தற்போது திருவண்ணாமலை ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சியளிக்கிறது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் அஷ்டலிங்க கோயில்கள், ஆதி அண்ணாமலையார் கோயில் உட்பட எல்லா கோயில்களிலும் இன்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் வரும் பௌர்ணமியை முன்னிட்டு சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

வளர்பிறை பிரதோஷ தினத்தை முன்னிட்டு இன்று(மே 20) காலை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து, காலை 8 மணிக்கு ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை, ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று(மே 19) பெய்த கனமழையின் காரணமாக பீமன் அருவி நிறைந்து செந்நிறத்தில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

போளூர் அருகே கடலாடி பகுதியைச் சேர்ந்த அசன் பாஷா,, வெற்றிச்செல்வன் ஆகியோர் மூன்று சக்கர ஆட்டோவில் போளூர் பகுதியில் இருந்து வேலூர் சாலையில் பூண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது நேற்று இரவு வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பேருந்து மூன்று சக்கர வாகனத்தின் மீது மோதியதில் அசன் பாஷா, வெற்றிச்செல்வன் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு, இன்று (19.05.2024) விடுமுறை தினம் என்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். இதனால், கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அண்ணாமலையாரையும் , உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தனர்.

தி.மலை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நாளை 19-05-2024 காலை 10 மணி அளவில் எஸ் முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் 11, 13, 15, 17, 19 வயது உள்ள ஆண், பெண் இருவருக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் தர்மபுரியில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலத்தில் உள்ள பருவதமலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்னல் தாக்கியதில் சிலைகள் சேதம் அடைந்தன. மேலும் ஒரு இடிதாங்கி பழுதடைந்தது. இதை அடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 4.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு இடி தாங்கிகள் வரவழைக்கப்பட்டு பொருத்தும் பணிகள் இன்று தொடங்கியது.
Sorry, no posts matched your criteria.