India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனியார் கல்லூரி முதல்நிலை வாக்காள மாணவர்களுக்கு 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வந்தவாசி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவா, வட்டாட்சியர் பொன்னுசாமி, தேர்தல் துணை வட்டாட்சியர் சதீஷ், பூங்குயில் சிவக்குமார், ரெட் கிராஸ் சங்கம் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உறுதி செய்தல் குறித்து காணொளி வாயிலாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (03.04.2024) ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் அ.உ.நி. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமையில் ஆசிரியர்கள் குழுவாக இணைந்து சுற்றியுள்ள ஏரிப்பட்டு , நடுக்குப்பம், ஏம்பலம், மீசநல்லூர் , ஜம்பம்பட்டு , ஜப்திகாரணி போன்ற ஊர்களில் ஆசிரியர்கள், பெற்றோர்களை நேரடியாக சந்தித்து 6,7,8,9,10 வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே அத்தி ஆரம்பப் பள்ளியில் கான்கிரீட் பூச்சு விழுந்ததில் 5 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த 5 பேரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு போலீசார் விபத்து குறித்து ஆசிரியர்களிடம் விசாரித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று காலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து கோயில் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்படும் நீர் மோரை அவர் வழங்கினார்.
பெரணமல்லூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் வேளாண்மை துணை அலுவலர் மரியசரிராஜன் , வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜிடம் நேற்று இடுபொருள் விற்றதற்கான பணத்தைக் கேட்டுள்ளார்.
அப்போது மரியசரிராஜனை கோவிந்தராஜ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் அளித்த புகாரின் பேரில் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு பங்கு கொள்ள வந்திருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று காலை நேரடி வீதியில் நடைபயணம் மேற்கொண்டு தெருவோர கடையில் இருந்த டீ கடையில் டீ அருந்தினார். அவருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி நாடாளுமன்ற வேட்பாளர் சி. என். அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலையில் முக்கிய வீதிகளில் நடந்து சென்று இந்தியா கூட்டணியின் தி.மலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வாக்கு சேகரித்தார். நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் முதல்வருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு போலீஸ் குவிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று (தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருப்பதால் திருவண்ணாமலை முழுவதும் “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” (No Flying Zone) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
சாத்தனூர் வனச்சரகம் பூ மலை காப்புக்காட்டில் வனச்சரக பணியாளர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்பு காட்டை ஒட்டி கிணற்றில் விழுந்த சிறிய புள்ளி மானை எடுத்து அறுத்து கூறு போட்டு கறியை விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை கைது செய்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி இருவருக்கும் தலா 30 ஆயிரம் வீதம் மொத்தம் 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.
Sorry, no posts matched your criteria.