India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (17.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபேசி
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119 அடி ஆகும். இன்றைய நீர் இருப்பு 117.3 அடியாக உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக தற்போது அணைக்கு 1360 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலுவிடம் நாளை (நவ.18) பிறந்தநாள் விழா காணும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M.S தரணிவேந்தன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஆரணி தொகுதி வெட்டியான் தொழுவம் ஊராட்சி பள்ளிக்கு ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M.S தரணிவேந்தன் MP நேரில் சென்று பார்வையிட்டு புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வருகை தந்த மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் அதிகாரியிடம் மனு அளித்னர். உடன் மாவட்ட பொருளாளர் DA.தட்சிணாமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள்.
பவுர்ணமி தினத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலமும் சாமி தரிசனமும் செய்தனர். ஐப்பசி பவுர்ணமி அதிகாலை முதல் மறு அதிகாலை வரை நீடித்ததால், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியனர். கோவிலில் சாமி தரிசனத்துக்கு நீண்ட நேரம் காத்திருந்தனர். கிரிவலப் பாதை தூரத்துடன் தூய்மையாக பராமரிக்கப்பட்டது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக,திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கண்ணமங்கலம், ஆரணி, சேவூர், ராட்டினமங்கலம், படவேடு, சந்தவாசல், வண்ணங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள 97 ஏரிகள் நிரம்பி வருகினறன.
திருவண்ணாமலை மாநகர திமுக செயலாளர் ப. கார்த்திவேல்மாறன் இன்று (16.11.2024), தனது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி அவர்களை, நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார். இந்நிகழ்வில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன், தனது பிறந்தநாளான இன்று அமைச்சர் எ.வ.வேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.
கார்த்திகை முதல் நாளான இன்று திருவண்ணாமலையில் புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவிலில் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகைபுரிந்தனர். இதனால், போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதுடன் திருவண்ணாமலை நகரம் முழுவதுமே மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.