Tiruvannamalai

News May 26, 2024

கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

image

திருவண்ணாமலையிலிருந்து கள்ளகுறிச்சி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வாழவச்சனூரில் இப்பணிகள் நடக்கிறது. இப்பகுதியில் இருபுறமும் கால்வாய் அமைக்காமல் சாலை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இரு புறமும் கால்வாய் அமைத்து தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

News May 25, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு பதிவு

image

வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை வந்தவாசி பழவேரி கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற இளைஞர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார் . பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து இளைஞரை தேடி வருகின்றனர்.

News May 25, 2024

நெற்றியில் கொம்பு முளைத்த அதிசய மாடு

image

செய்யாறு நகர வீதிகளில் நெற்றியில் கொம்பு முளைத்த அதிசய மாடு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. அதனை ஏராளமான மக்கள் வியப்புடன் பார்த்தனர். பின்னர் வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி மாட்டை தொட்டு வணங்கி சென்றனர். மேலும் ஏராளமானோர் அதிசய மாட்டுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

News May 25, 2024

திருவண்ணாமலை: சாத்தனூர் அணை குறிப்பு!

image

திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த சாத்தனூர் அணை 1958 இல் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. இந்த அணை சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். இங்கு அழகிய பூங்காவும், ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணையும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். மேலும், முழு அளவு 119 அடி உயரம் கொண்டதாகும்.

News May 25, 2024

சேத்துப்பட்டு: கார் மோதி விபத்து

image

தி.மலை மாவட்டம் செங்கோட்டை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். கட்டிட தொழிலாளி. நேற்று மாலை வேலை முடித்துவிட்டு அனாதிமங்கலம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 25, 2024

கேளூர் சந்தைமேட்டில் மாட்டுச்சந்தை

image

போளூர் அடுத்த கேளூர் சந்தைமேட்டில் வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டுச்சந்தை மற்றும் காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைமாடுகள், கன்றுகள் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

News May 24, 2024

தி.மலை அருகே விபத்து: ஒருவர் பலி 

image

வெம்பாக்கம் அடுத்த உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் பாலாஜி. இவர் நேற்று தனது நண்பர் முருகன் என்பவருடன் பைக்கில் அமர்ந்து காஞ்சிபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் இருவரும் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 24, 2024

பெட்டி கடைகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு

image

கீழ்பெண்ணாத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையில் கீழ்பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மளிகை மற்றும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை சம்மந்தமான பொருள்கள் மற்றும் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படுகிறதா என்று சி.கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து அபராதம் விதித்தனர்.

News May 24, 2024

தி.மலை: எச்சரிக்கையுடன் இருப்பீர்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் எதிர்வரும் தென்மேற்கு பருவ மழை குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். மழை மின்னல் காற்று காலங்களில் பொதுமக்கள் மின்சார கம்பங்கள் மின்பாதை ஆகியவற்றில் அருகில் நிற்கவோ செல்லவோ கூடாது. மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டால் மின்வாரிய அலுவலகத்திற்கு உடனே தெரியப்படுத்தி சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News May 24, 2024

திருவண்ணாமலை: இரசாயன மாம்பழங்கள் அழிப்பு

image

திருவண்ணாமலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திருவண்ணாமலையில் பழக்கடைகள் பலவற்றில் ஆய்வு செய்தபோது ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் மாம்பழங்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

error: Content is protected !!