Tiruvannamalai

News April 11, 2024

தண்டாரம்பட்டு: சோகத்தில் மூழ்கிய விவசாயி

image

தண்டராம்பட்டு அடுத்த கீழ்ரவந்தவாடி கிராமத்தில் விவசாயி ஒருவர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். எதிர்பாராத விதமாக கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எறிந்தது. விவசாய நிலத்திற்கு வந்த விவசாயி  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

News April 11, 2024

தி.மலை: பரோட்டா போட்ட வேட்பாளர்

image

போளூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட ஆரணி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஓட்டல் கடை ஒன்றில் பரோட்டா போட்டு வாக்குச் சேகரித்தார். அப்பொழுது, திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் கம்பன், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

News April 11, 2024

ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

image

வந்தவாசி அருகே உள்ள அம்மையப்பட்டு கிராமத்தில் ஈத்கா மைதானத்தில் ஏராளமான இசுலாமியர்கள் ஒன்று கூடி இன்று ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர். இந்த சிறப்பு தொழுகைக்கு பிறகு அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் வந்தவாசி பகுதியின் பல்வேறு இடங்களில் தொழுகை நடைபெற்றது

News April 11, 2024

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் 

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக நேற்று ஒருவரை கைது செய்தனா். அவர் மருதாடு கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (24) என்பதும், அங்கு அவா் பெட்டிக் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News April 11, 2024

அழைப்பு விடுத்த எஸ்.பி.

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், காவல், தீயணைப்பு துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் தேர்தலில் தங்களது பங்களிப்பினை அளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் பணிக்கு வர விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவினை அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறும் சந்தேகம் இருப்பின் 9600899330 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று எஸ்பி தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

செருப்பு தைத்த பிரபல நடிகர்

image

செங்கத்தில் நேற்று பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் பிரச்சாரம் செய்தார். அப்போது,  அப்பொழுது தெருவோர செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடையில் அமர்ந்து பழைய செருப்பை தைத்துக்கொடுத்து வாக்கு சேகரித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News April 11, 2024

ஏப்ரல் 13 ஆம் தேதி பந்தக்கால் உற்சவம்

image

உலக புகழ் பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில், சித்திரை வசந்த உற்சவம் வரும் 14 ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் ஆறு மணி வரை பந்தக்கால் உற்சவம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 10, 2024

தி.மலையில் 101.6 டிகிரி வெப்பம்

image

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தி.மலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 101.6 டிகிரி பாரன்ஹீட், 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News April 10, 2024

45 கை கடிகாரங்கள் பறிமுதல்

image

செங்கம் அருகே மேல்செங்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 45 கை கடிகாரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 10, 2024

செங்கம்: பெண்களிடம் ஆட்சியர் விழிப்புணர்வு

image

செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர்  பாஸ்கர பாண்டியன் வாக்களிப்பதன் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். 

error: Content is protected !!