India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே களம்பூரில் சுமார் 150 க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரிசி ஆலைகளில் அரசியல்வாதிகள் பணம், ஆவணங்கள் பதுக்கி உள்ளதாக புகாரின் பேரில் சென்னை வருமானவரி துறை இணை இயக்குநர் தலைமையில் சென்னை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 24 அதிகாரிகள் 6 கார்களில் களம்பூரில் உள்ள அரிசி ஆலைகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
செங்கம் அருகே உள்ள வீரானந்தல் பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(44), கோபால்(29) ஆகியோர் நாட்டு துப்பாக்கிகளுடன் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வாசுதேவன்பட்டு பகுதியில் சுற்றி திரிந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் அவர்களை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்த 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளார் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெள்ளார் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கரம் கொடுப்போம் அறம் செய்ய சேவை அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.
தண்டராம்பட்டு அருகே நாலாள்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராஜா, பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் காட்டில் மானை வேட்டையாடி இறைச்சியை விற்றதாக தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் சீனிவாசன் மற்றும் வன அலுவலர்கள் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி கடந்த 27 நாட்களில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றதாக ரூ. 4.52 கோடி பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் ரூ. 82 இலட்சம் விடுவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் தீமிதி திருவிழாவின் முதல் நாள் ஆரம்பம் இன்று (12.04.2024) தொடங்கியது. மேலும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் இன்று காலை 5 மணி அளவில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூர் நந்தி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த மோகன் சாரி என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,17,900 யை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவண்ணாமலை தொகுதி தி.மு.க வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து தி.மு.க வினர் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தனர். அப்போது பேசிய மு.பெ. கிரி எம்.எல்.ஏ அனைத்து துறைகளின் மூலம் சாலைகள், தடுப்பணைகள், அரசு மருத்துவமனைகள் என ஏராளமான வளர்ச்சிப்பணிகள் சுமார் ரூ.650 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றால் சாலை அமைப்போம் என அதிமுக பொய் பிரச்சாரம் செய்கிறது என்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ரமலான் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு நேற்று வழங்கப்பட்டன. தமுமுக சாா்பில் ரமலான் பண்டிகையொட்டி செய்யாறு நகர அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரிசி, இறைச்சி, காய்கனிகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 440 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தி.மலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 101.6 டிகிரி பாரன்ஹீட், 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.