Tiruvannamalai

News October 11, 2024

மகா தீப மலைக்கு செல்ல முயன்ற கேரள இளைஞா் உயிரிழப்பு

image

திருவண்ணாமலையில் மகா தீப மலை மீதுள்ள ஆஸ்ரமத்துக்குச் செல்ல முயன்ற கேரள இளைஞா், மூச்சுத்திணறி உயிரிழந்தாா். எா்ணாகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணந்து என்பவர் அக்.5ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள கோவில்கள், ஆஸ்ரமங்களை தரிசிக்க வந்தாா். அக்.8-ஆம் தேதி மாலை கிரிவலப் பாதையில் ஒரு ஆஸ்ரமத்தில் தியானம் செய்துவிட்டு, மகா தீப மலையை ஒட்டியுள்ள கந்தாஸ்ரமத்துக்குச் சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

News October 10, 2024

குப்பநத்தம் அணை திறக்க இருப்பதால் எச்சரிக்கை

image

செங்கம் வட்டம், செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குப்பநத்தம் அணை இன்று பிற்பகல் 3 மணிக்கு திறக்க இருப்பதாக பொதுப்பணித்துறை (நீர் வளம்) அறிவித்துள்ளது. அணை திறக்கப்பட உள்ளதால் நீரின் வேகம் அதிகரிக்கும் என்பதால் செய்யாற்றின் கரையின் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

News October 10, 2024

பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் எம்பி

image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம் ஆகிய கிராமங்களுக்கு இன்று செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி தலைமையில் திருவண்ணாமலை திமுக பாராளுமன்ற உறுப்பினர் சி. என்.அண்ணாதுரை அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்தார்.

News October 10, 2024

தி.மலையில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல சுழற்சி என பல காரணங்களால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

திருவண்ணாமலை ரேஷன் கடையில் 120 பணியிடங்கள்

image

திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) என 120 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தகுந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து www.drbtvl.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.

News October 9, 2024

பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மனு அளித்து தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர்.

News October 9, 2024

ஆரணி அருகே 52 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.

image

ஆரணியை அடுத்த தச்சூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கடையில் சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த 52கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து போலீசார் சுப்பிரமணி (51), அவரது மகன் ராஜசேகர் (33) ஆகியோரை கைது செய்து, புகை யிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News October 9, 2024

திருவண்ணாமலையில் இருந்து சிறப்பு பேருந்துகள்

image

ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை திருவண்ணாமலையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

News October 9, 2024

தி.மலையில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு பரவலாக மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (08.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.