India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெம்பாக்கம் அடுத்த உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் பாலாஜி. இவர் நேற்று தனது நண்பர் முருகன் என்பவருடன் பைக்கில் அமர்ந்து காஞ்சிபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் இருவரும் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கீழ்பெண்ணாத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையில் கீழ்பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மளிகை மற்றும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை சம்மந்தமான பொருள்கள் மற்றும் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படுகிறதா என்று சி.கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் எதிர்வரும் தென்மேற்கு பருவ மழை குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். மழை மின்னல் காற்று காலங்களில் பொதுமக்கள் மின்சார கம்பங்கள் மின்பாதை ஆகியவற்றில் அருகில் நிற்கவோ செல்லவோ கூடாது. மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டால் மின்வாரிய அலுவலகத்திற்கு உடனே தெரியப்படுத்தி சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருவண்ணாமலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திருவண்ணாமலையில் பழக்கடைகள் பலவற்றில் ஆய்வு செய்தபோது ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் மாம்பழங்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.
திருவண்ணாமலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாணவிகளுக்கான 7, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாநில அளவிலான கைப்பந்து செலக்சன் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தேர்வு பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 12 ஆம் வகுப்புவரை விடுதி உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி வட்டம் வீரம்பாக்கம் கிராமத்தில் கார்த்திக், சுரேஷ் ஆகிய இருவரும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,20,000 கடன் தருவதாக கூறி பல பெண்களிடம் ரூ.1650 வைப்புநிதி பணம் கட்ட வேண்டும் என்று கூறி வசூல் செய்து தலைமறைவாகி விட்டனர். அவர்களை தொடர்பு கொண்ட மக்கள் அழைப்பை ஏற்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அறிந்த பெண்கள் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை ஶ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி மாத பௌர்ணமி முன்னிட்டு, நேற்று இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மிதமான மழையில் குடை பிடித்தபடி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருக்கோவில் அருகே அமைக்கப்பட்ட பந்தலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். கிரிவலம் வந்த பக்தர்களுக்கு மலை சுற்றிலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலின் வெளிப்புறம் முருகப்பெருமான் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை தரிசித்து மகிழ்ந்தனர்.
செங்கம் போளூர் குப்பநத்தம் சந்திப்பில் அரசு பேருந்து போளூரில் இருந்து செங்கம் நோக்கி வந்த போது பின் தொடர்ந்து வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாது. இதில், பைக்கில் இருந்த சிறுவன் படுகாயமடைந்தான். அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தி.மலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், ஆரணி – வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சாமந்தவாடி ஏரியில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் இன்று(மே 22) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.