India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருடப்பட்டுள்ளது. மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்குகளும் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து செங்கம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ் பியாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு சிவகங்கையில் நடைபெற்ற லாக்கப் மரணம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எனக் கூறப்படும் வெள்ளத்துரை இன்று பணியிலிருந்து ஓய்வுபெற இருந்த நிலையில் பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடப்பாண்டில் ,இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கையுடன் தொடங்கியது. மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு வருகிற ஜூன் 10 முதல் 15 -ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.
செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25 ஆண்டுக்கான இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வினை கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் துவக்கி வைத்தார். இதில், கல்லூரியில் பணிபுரியும் பல நிலை அலுவலக மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று தகுதி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்று சான்றிதழ்களை பரிசீலனை செய்தனர்.
வந்தவாசி அடுத்த மங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி. இவர் தனது தாயாருடன் வீட்டில் வசித்து வந்தார். இவர் நேற்று வீட்டில் வளர்க்கும் மாட்டிற்கு தண்ணீர் காட்டுவதற்காக சொந்த நிலத்தின் அருகே சென்ற பொழுது மாட்டின் கயிறு காலில் சிக்கி அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், கிணற்றில் உடல் அழுகிய நிலையில் தனலட்சுமியின் சடலம் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் இயங்கி வரும் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 4ஆம் ஆண்டு மாணவ, மாணவிகளின் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட கண்காட்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எஸ்.கவுரி, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பி.தியாகராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் பயிற்சி அனுபவங்களைப் பற்றி கேட்டறிந்தனா் .
திருவண்ணாமலை நகரம் சின்னக் கடைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில் இன்று மாலை 6 மாணிக்கு தேய்பிறை ஷஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் திருவண்ணாமலையை சேர்ந்த தனது நண்பர் பாஸ்கர் என்பவரிடம் ரியல் எஸ்டேட் செய்வதற்காக பணம் கொடுத்து வைத்திருந்தார். அந்த பணத்தை நேற்று கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு விஸ்வநாதனை பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி மகன் ஆகியோர் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பரோலில் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகிரி மகராஜ் என்பவர் உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரியில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரம் வரை உலக நன்மை வேண்டி பாதை யாத்திரை மற்றும் தவழ்ந்த நிலை ஆசனம் செய்து நடந்து வந்தார். கடந்த 14 மாதங்களாக நடந்து வந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலையை வந்தடைந்தார். திருவண்ணாமலை தேரடி தெருவில் அவர் பாதயாத்திரை சென்ற போது மக்கள் அவரை வணங்கிச் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.